/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பழநியில் இரண்டரை வயது குழந்தையை கடித்து குதறிய நாய்கள்
/
பழநியில் இரண்டரை வயது குழந்தையை கடித்து குதறிய நாய்கள்
பழநியில் இரண்டரை வயது குழந்தையை கடித்து குதறிய நாய்கள்
பழநியில் இரண்டரை வயது குழந்தையை கடித்து குதறிய நாய்கள்
UPDATED : செப் 09, 2025 06:51 AM
ADDED : செப் 08, 2025 11:59 PM

பழநி; பழநி கோட்டைமேட்டு தெருவில் விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறின.
பழநி கோட்டைமேட்டு தெருவில் வசித்து வருபவர் தொழிலாளி சதாம் உசேன், இவரது இரண்டரை வயது மகன் முஹமது ரையான். நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கடித்து குதறின.
பலத்த காயமடைந்த குழந்தையை அப்பகுதியினர் நாய்களிடமிருந்து மீட்டு பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பழநியில் தெருநாய்களால் குழந்தைகள், முதியோர்கள், வாகன ஓட்டிகள் பாதிப்படைந்து வருகின்றனர். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.