தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ கொடைக்கானலில் நள்ளிரவில் ஆக்கிரமிப்பு சர்ச் அகற்றம்

 கொடைக்கானலில் நள்ளிரவில் ஆக்கிரமிப்பு சர்ச் அகற்றம்

 கொடைக்கானலில் நள்ளிரவில் ஆக்கிரமிப்பு சர்ச் அகற்றம்

1


UPDATED : ஏப் 11, 2026 06:52 AM

ADDED : ஏப் 11, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 11, 2026 06:52 AM ADDED : ஏப் 11, 2026 03:59 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: கொடைக்கானலில் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச் அகற்றப்பட்டதாக, அரசு தரப்பு தெரிவித்ததை பதிவு செய்து, அவமதிப்பு வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் எம்.எம்.சாலையின் ஓரம், செயின்ட் அந்தோணி சர்ச் நிர்வாகம் மற்றும் செல்வம் என்பவர் தரப்பு ஆக்கிரமித்துள்ளதாகவும், அதை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டும், நடவடிக்கை எடுக்காததால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், சென்னை அலர்மேல் வள்ளி மனு தாக்கல் செய்தார்.

நேற்று முன்தினம் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அமர்வு, ஆக்கிரமிப்பை அகற்ற கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்தது. அதுகுறித்து, உடனடி அறிக்கை அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்படி, நேற்று அதே நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்தது. அரசு தரப்பில், 'ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்பு நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும்' என, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவுசெய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

நீதிமன்றம் அதிரடியால், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆர்.டி.ஓ., கீர்த்தனா தலைமையில் நகராட்சி கமிஷனர் சங்கர், தாசில்தார் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us