தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ முள் படுக்கையில் பெண் சாமியார் தவம்

முள் படுக்கையில் பெண் சாமியார் தவம்

முள் படுக்கையில் பெண் சாமியார் தவம்


ADDED : ஜன 02, 2025 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும்.

முத்துமாரியம்மனுக்கு சாமியார் நாகராணி அம்மையார், 57, தினசரி பூஜை செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழியில் நடக்கும் மண்டல பூஜை இங்கு பிரசித்தி பெற்றது. இந்தாண்டு மண்டல பூஜையை முன்னிட்டு, நேற்று காலை முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

காலை 9:00 மணிமுதல் சிறப்பு பூஜைகள் துவங்கின. கோவில் முன், ஏழு அடி உயரத்தில் கத்தாழை, சப்பாத்தி கள்ளி, உடைமுள், கருவேல மர முள் உள்ளிட்டவைகளால் படுக்கை தயார் செய்யப்பட்டது. நாகராணி அம்மையார் முள் படுக்கையில் ஏறி அமர்ந்து, சாமியாடி தவம் செய்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us