/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சிக்கன் பர்கரில் கட்டுக்கம்பி மூடப்பட்ட உணவு நிறுவனம்
/
சிக்கன் பர்கரில் கட்டுக்கம்பி மூடப்பட்ட உணவு நிறுவனம்
சிக்கன் பர்கரில் கட்டுக்கம்பி மூடப்பட்ட உணவு நிறுவனம்
சிக்கன் பர்கரில் கட்டுக்கம்பி மூடப்பட்ட உணவு நிறுவனம்
UPDATED : நவ 25, 2025 07:58 AM
ADDED : நவ 25, 2025 01:45 AM

ஈரோடு, ஈரோட்டில் குமலன்குட்டை அருகில் ரிலையன்ஸ் மால் உள்ளது. இங்கு முதல் தளத்தில் 'மெர்ரி பெர்ரி' என்ற பிரபல உணவு நிறுவனம் செயல்படுகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி மைலம்பாடியை சேர்ந்த பாலமுருகன் மனைவி கோகுலசெல்வி, 37, அவரது மகன், மகள் நேற்று சென்றனர். சிக்கன் பர்கர் ஆர்டர் செய்து சாப்பிட துவங்கினர். அந்த பர்கரில், ஆறு கட்டுக்கம்பி இருந்தது தெரியவந்தது.
இதுபற்றி நிறுவனம் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலருக்கு கோகுலசெல்வி தரப்பினர் புகார் செய்தார். நிறுவனத்தினர், 'தவறு நடந்துவிட்டது' என்று வருத்தம் தெரிவித்து, வேறு உணவை பெற்று கொள்ளவும், வலியுறுத்தினர்.
அதற்குள் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலானவர்கள் சென்று விட்டனர். அவற்றை ஆய்வு செய்து, கட்டுக்கம்பி இருந்ததை உறுதி செய்து, நிறுவன ஊழியர்களிடம் விபரம் சேகரித்தனர்.
இறுதியாக நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கி, கடையை மூடும்படி உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து கடை மூடப்பட்டது.

