/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு
/
செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு
செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு
செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு
ADDED : ஏப் 04, 2025 06:55 AM

பெரம்பலுார் : செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
தமிழகத்திலேயே அதிகளவில், பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. செட்டிக்குளம், பாடாலுார், இரூர், வேலுார் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் அதிக காரத்தன்மை, முளைப்பு திறன், மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.
அதிக கந்தக உள்ளடக்கம் இருப்பதால், மற்ற வகைகளுடன் ஒப்பிடும் போது, அதிக கார சுவை கொண்டது. 8-9 மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும். ஓராண்டு வரை பட்டறைகளில் இருப்பு வைக்க முடியும்.
இந்த சின்ன வெங்காயம் கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தனித்துவமிக்க செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு வழங்க 2022ல் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
நேற்று செட்டிக்குளம் சின்ன வெங்காத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

