தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ரோட்டில் கிடந்த தங்க செயின் ஒப்படைத்த 'நேர்மை' போலீஸ்

ரோட்டில் கிடந்த தங்க செயின் ஒப்படைத்த 'நேர்மை' போலீஸ்

ரோட்டில் கிடந்த தங்க செயின் ஒப்படைத்த 'நேர்மை' போலீஸ்


ADDED : ஆக 21, 2025 11:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 11:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: காங்கயத்தில் வாக்கிங் சென்றபோது கிடந்த தங்க செயினை போலீஸ்காரர் கண்டறிந்து, ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பாலுசாமி, 32 என்பவர் பணியாற்றி வந்தார். காங்கயம் இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக உள்ளார். நேற்று காலை காங்கயம் - பழைய கோட்டை ரோட்டில் வாக்கிங் சென்றபோது,ஒரு சவரன் தங்க செயினை கண்டெடுத்தார். யாரும் உரிமை கோரவில்லை.

காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கபில்தேவிடம் ஒப்படைத்தார். நகையை தவற விட்டு சென்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். போலீசாரின் நேர்மையை எஸ்.பி., - ஏ.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us