sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ மூதாட்டியை பயமுறுத்திய மனித உருவ ரோபோ கைது

 மூதாட்டியை பயமுறுத்திய மனித உருவ ரோபோ கைது

 மூதாட்டியை பயமுறுத்திய மனித உருவ ரோபோ கைது


UPDATED : மார் 19, 2026 06:02 AM

ADDED : மார் 19, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2026 06:02 AM ADDED : மார் 19, 2026 02:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பீஜிங்: சீனாவில் மூதாட்டியை பயமுறுத்தியதாக, உலகிலேயே முதல்முறையாக ரோபோ ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் மக்காவ் நகரில், கடந்த 12ம் தேதி இரவு, 70 வயது மூதாட்டி ஒருவர் சாலையில் மொபைல் போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தார். திடீரென பின்னால் திரும்பிப் பார்த்தபோது, மனித உருவ ரோபோ மாடல் ஒன்று நெருக்கமாக நின்றிருந்தது.

இதைக் கண்டு பயத்தில் அலறிய அந்த மூதாட்டி, ரோபோவை நோக்கி கோபமாக திட்டினார். 'உன்னால் என் இதயமே நின்றுபோனது' என அந்த மூதாட்டி திட்ட, பதிலுக்கு ரோபோவும் அவரிடம் ஏதோ பேசியது.

இதனால் அங்கு கூட்டம் கூடவே போலீசார் விரைந்து வந்து ரோபோவை கைது செய்து அழைத்துச் சென்றனர். ஒரு போலீஸ் அதிகாரி ரோபோவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.

பின்னர் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். உடல் ரீதியாக காயம் ஏதும் இல்லை என்றாலும், பயத்தால் இரவு முழுதும் அங்கேயே தங்க வைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us