தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/பழங்குடியின மாணவர்களுக்கு சிங்கப்பெண் படை நேசக்கரம்

பழங்குடியின மாணவர்களுக்கு சிங்கப்பெண் படை நேசக்கரம்

பழங்குடியின மாணவர்களுக்கு சிங்கப்பெண் படை நேசக்கரம்


ADDED : ஜூலை 22, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 04:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: பள்ளி படிப்பை தொடர முடியாமல் தவித்த பழங்குடியின மாணவர்களை, பள்ளியில் சேர்ந்த சிங்கப்பெண் அதிரடிப்படையினர்.

வால்பாறை அடுத்துள்ள, காடம்பாறை செல்லும் வழியில் உள்ளது கீழ்பூனாஞ்சி செட்டில்மென்ட். இங்கு புலையர் இனத்தை சேர்ந்த, பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை எஸ்.ஐ., ரெஜினாபானு தலைமையிலான போலீசார், பழங்குடியின மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, அங்கு தந்தையை இழந்த இரண்டு குழந்தைகள், படிப்பை தொடர முடியாமல் கடந்த ஓராண்டாக வீட்டிலேயே இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து படிப்பை தொடர முடியாமல் தவித்த நாகம்மாள்,13, முருகன்,11, ஆகியோருக்கு ஆடை மற்றும் நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்து, வால்பாறை பழங்குடியின மாணவர் உண்டு உறைவிடப்பள்ளியில் சேர்த்தனர்.

பள்ளியில், சிறுவனை ஐந்தாம் வகுப்பிலும், சிறுமியை எட்டாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us