sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

 'கூல்டிரிங்க்ஸ் கடை' என்ற பெயரில் திறக்கப்பட்ட 'டாஸ்மாக்'கிற்கு பூட்டு

/

 'கூல்டிரிங்க்ஸ் கடை' என்ற பெயரில் திறக்கப்பட்ட 'டாஸ்மாக்'கிற்கு பூட்டு

 'கூல்டிரிங்க்ஸ் கடை' என்ற பெயரில் திறக்கப்பட்ட 'டாஸ்மாக்'கிற்கு பூட்டு

 'கூல்டிரிங்க்ஸ் கடை' என்ற பெயரில் திறக்கப்பட்ட 'டாஸ்மாக்'கிற்கு பூட்டு

3


ADDED : ஜன 13, 2026 11:53 PM

Google News

3

ADDED : ஜன 13, 2026 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பத்துார்: 'கூல்டிரிங்க்ஸ் கடை' என பெயர் பலகை வைத்து, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரண்டே நாளில் கடைக்கு பூட்டு போடப்பட்டது.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர், எம்.வி.சாமி நகரில், புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க, ஆறு மாதத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால், கடை அமைக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன், ஜி.எஸ்., கூல்டிரிங்க்ஸ் கடை என பெயர் பலகை வைத்துவிட்டு, உள்ளே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இயங்கியது.

இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை மூடி சென்றனர்.

இதனிடையே, நேற்றும் வழக்கம்போல் மதியம் 12:00 மணிக்கு கடை திறக்கப்பட்டது. இதனால் ஆவேச மடைந்த மக்கள், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை, 5:00 மணி வரை போராட்டம் நீடித்தது. மக்களிடம், கடை ஊழியர்களே பேச்சு நடத்தினர்.

கடையை நிரந்தரமாக மூடுவதாக கூறிவிட்டு, உயர் அதிகாரிகளிடம் பேசினர். தொடர்ந்து, 5:00 மணிக்கு கடை மூடப்பட்டது. மக்களும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us