தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ அமைச்சரின் துண்டு 'டான்ஸ்' சமூக வலைதளங்களில் வைரல்

 அமைச்சரின் துண்டு 'டான்ஸ்' சமூக வலைதளங்களில் வைரல்

 அமைச்சரின் துண்டு 'டான்ஸ்' சமூக வலைதளங்களில் வைரல்


UPDATED : பிப் 18, 2026 11:34 AM

ADDED : பிப் 18, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2026 11:34 AM ADDED : பிப் 18, 2026 03:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம். கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளரான இவர், தி.மு.க., மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக வன்னியர் சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாசின் தி.மு.க.,வுக்கு எதிரான பேச்சுகளுக்கு அவ்வப்போது பதிலடி கொடுப்பது வழக்கம்.

சமீபத்தில், திருப்பத்துார் மாவட்டம், திவலான்பேட்டையில், தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நடந்தது.

அதில் பங்கேற்க கூட்டத்திற்கு நடுவே வந்த முதல்வர் ஸ்டாலினை வரவேற்று, பாடல் ஒலிக்கப்பட்டது.

அப்போது, அமைச்சர் பன்னீர்செல்வம் எழுந்து நின்று, கருப்பு சிவப்பு துண்டை தலையை சுற்றி ஆடியபடி, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், தொண்டர்களிடம் 'வைப்' ஏற்படுத்தினார்.

அமைச்சரின் துண்டு டான்ஸ், இன்ஸ்டாகிராம் உட்பட பல்வேறு சமூக வலைதளங்களில் தி.மு.க.,வினரால் பகிரப்பட்டு, வைரலானது.

வயது மூப்பையும் பொருட்படுத்தாமல், இளைஞரை போல ஆட்டம் போட்ட அமைச்சரின் வீடியோ, கடலுார் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களிடம் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us