தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் குழந்தைகள் தரிசனம்

 நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் குழந்தைகள் தரிசனம்

 நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் குழந்தைகள் தரிசனம்


ADDED : பிப் 06, 2026 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 01:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையான நிலையில் ஹிந்து முன்னணியினர் அக்குழந்தைகளை கோயிலுக்குள் தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர்.

பிப்.3ல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி இக்கோயிலில் சமபந்தி விருந்து நடந்தது. உணவருந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 4 குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்ற சமூக ஆர்வலர் டேவிட் ராஜா மீது கோயில் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் போலீசில் புகாரளித்தார்.

இந்நிலையில், அக்குழந்தைகள் உட்பட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 30 பேரை நேற்று ஹிந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லையப்பர் கோயிலுக்குள் அழைத்து சென்றார். சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தனர்.



குற்றாலநாதன் கூறியதாவது: குழந்தைகள் சாப்பிட வரும்போது பந்தி நடந்துகொண்டுதான் இருந்தது. மற்றவர்கள் உணவை பாத்திரங்களில் எடுத்துச் சென்றதை 'சிசிடிவி' காட்சிகளில் பார்க்க முடிந்தது. சமூகநீதி பேசும் தி.மு.க.,வினர் அக்குழந்தைகளை தவிர்த்துள்ளனர். ஆகையால் தரிசனத்திற்கு அழைத்து சென்றோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us