தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/கழிவு பஞ்சையும் விடாத திருப்பூர் விவசாயிகள் : உரமாக பயன்படுத்தி உற்சாகம்

கழிவு பஞ்சையும் விடாத திருப்பூர் விவசாயிகள் : உரமாக பயன்படுத்தி உற்சாகம்

கழிவு பஞ்சையும் விடாத திருப்பூர் விவசாயிகள் : உரமாக பயன்படுத்தி உற்சாகம்


UPDATED : நவ 09, 2015 11:07 PM

ADDED : நவ 09, 2015 08:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2015 11:07 PM ADDED : நவ 09, 2015 08:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: இயற்கை உரத்துக்கு மாற்றாக, கழிவு பஞ்சை பயன்படுத்தும் புதிய ஐடியாவை திருப்பூர் சுற்றுப்பகுதி விவசாயிகள் பின்பற்றி வெற்றி கண்டுள்ளனர்.கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், இயற்கை உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள வேளாண் நிலத்தில் கழிவு பஞ்சை உரமாக பயன்படுத்தும் புது நடைமுறை வந்துள்ளது. திருப்பூர், கோவை மாவட்டங்களில் நுால் மில்கள், பஞ்சு அரவை மில்கள் அதிகம் உள்ளன.இவற்றில் இருந்து ஏராளமான, பஞ்சு கழிவு வெளியேற்றப்படுகிறது. நுால் மில்களில் கிடைக்கும் முதல்தர கழிவு நுால், 'ஓபன் எண்ட் ஸ்பின்னிங்' மில்களில் பயன்படுகிறது. இரண்டாந்தர கழிவையே விவசாயிகள் உரமாக பயன்படுத்துகின்றனர். கழிவு பஞ்சு, ஒரு டன் சராசரியாக, 1,500 முதல், 1,750 ரூபாய் வரை விற்கப்படுகிறது.விவசாயிகள், நிலத்தை உழுது, விதைப்புக்கு தயார்படுத்தும்போது, நிலம் முழுவதும் கழிவு பஞ்சை பரப்புகின்றனர். கழிவு பஞ்சின் மென்மையான தன்மை, நிலத்துக்கு பாய்ச்சும் தண்ணீரை, தன்னுள் தேக்கி வைக்கிறது; நிலம் நீரை உறிஞ்சுவது தவிர்க்கப்படுகிறது.புகையிலை, மஞ்சள் பயிர் களுக்கும், காய்கறி பயிரிடும் நிலத்துக்கும், இக்கழிவு பஞ்சு உரமாக பயன்படுகிறது. கழிவுப்பஞ்சு மண் இறுக்கத்தை குறைத்து நெகிழ்வை ஏற்படுத்தும். மற்ற கழிவுகளை போல், மக்கி நிலத்தில் உரமாக மாறுகிறது. நுால் மில்களில் கழிவாக தள்ளப்படும் இவை, இப்போது காசாக மாறுவதோடு, வேளாண்மைக்கும் பயன் படுவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us