விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர்: உயிர் பிழைத்த பின் 'செல்பி' எடுத்த அதிகாரி
விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர்: உயிர் பிழைத்த பின் 'செல்பி' எடுத்த அதிகாரி
ADDED : மே 24, 2026 04:24 AM

லே: லடாக்கில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த அதிகாரி உட்பட மூன்று பேர் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஜம்மு - காஷ்மீர், லடாக்கை ஒட்டிய மலைப் பகுதியான சர்வதேச எல்லையில், ஹெலிகாப்டர் வாயிலாக நம் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணை சரக்குகளை ஏற்றிச் செல்லவும், அதிகாரிகள் பயணிக்கவும் சிறிய ரக ஹெலிகாப்டர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 20ம் தேதி லடாக்கின் லே பகுதியில், 'சீட்டா' எனப்படும், சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று பறந்தது.
அதில், ராணுவ ஜெனரல் மேஜர் சச்சின் மேத்தா மற்றும் இரு ராணுவ அதிகாரிகள் பயணித்தனர். மலைப்பகுதியில் சென்ற போது, திடீரென கீழே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியது.
இதில் பயணித்த மேஜர் சச்சின் உள்ளிட்ட மூவரும் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், விபத்தில் சிக்கிய மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உரிய சிகிச்சைக்கு பின் மூவரும், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விபத்து நடந்த போது, கீழே விழுந்த ராணுவ ஜெனரல் மேஜர் சச்சின் மேத்தா, விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டருடன், 'செல்பி' எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அடிக்கடி விபத்து கடந்த 1970களில் இருந்து சேவையில் உள்ள, 'சீட்டா' ரக ஹெலிகாப்டர்கள், 1984ல் சியாச்சின் மலைப்பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது முக்கிய பங்கு வகித்தது.
அ டிக்கடி விபத்துகளில் சிக்கி பல விமானிகள் உயிரிழந்ததை அடுத்து, 'சீட்டா' ரக ஹெலிகாப்டர்கள் ராணுவ பணியில் குறைந்த அளவே பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கு மாற்றாக, 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
