தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ஊட்டி மலை ரயில் வாடகை ரூ.3 லட்சம்; ஜெர்மன் சுற்றுலா பயணிகள் 5 பேர் ஜாலி பயணம்

 ஊட்டி மலை ரயில் வாடகை ரூ.3 லட்சம்; ஜெர்மன் சுற்றுலா பயணிகள் 5 பேர் ஜாலி பயணம்

 ஊட்டி மலை ரயில் வாடகை ரூ.3 லட்சம்; ஜெர்மன் சுற்றுலா பயணிகள் 5 பேர் ஜாலி பயணம்


ADDED : மார் 25, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 05:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார்- ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் நுாற்றாண்டு பழமை வாய்ந்த யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற, மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜினை பயன்படுத்தி, மலை ரயிலை வாடகைக்கு எடுத்த, ஜெர்மன் நாட்டை சேர்ந்த பீட்டர் என்பவரின் தலைமையில், 5 பேர் கொண்ட ரயில் ஆர்வலர்கள் குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையம் பயணம் மேற்கொண்டனர்.

நேற்று காலை, 11:45 மணிக்கு குன்னூரில் புறப்பட்ட இந்த சிறப்பு மலை ரயில், ரன்னிமேடு, ஹில் குரோவ் உட்பட ஸ்டேஷன்கள், பாலங்கள் உட்பட பல இடங்களிலும் நிறுத்தப்பட்டது. மேட்டுப்பாளையத்தை, 4:15 மணிக்கு சென்றடைந்தது. இவர்கள், 5 பேருடன், இரு பெட்டிகள், இரு சரக்கு காலி பெட்டிகள் இணைத்து சென்ற ரயிலில், 4 பிரேக்ஸ் மென், இரு டிரைவர்கள், மெக்கானிக் மற்றும் சுற்றுலா மேலாளர் மட்டுமே இருந்தனர்.

ஏற்பாடுகளை செய்த சிலிகுரியை சேர்ந்த 'கிளப் சைட் டூர்ஸ்' நிறுவன சுற்றுலா மேலாளர் கிருஷ்ண காந்த் கூறுகையில்,''ஜெர்மன் நாட்டை சேர்ந்த இந்த குழுவினர் உலகம் முழுவதும் சுற்றுலா சென்று ரயில்களில் பயணம் செய்வதை ஆர்வமாக கொண்டுள்ளனர். ஏற்கனவே, 3 முறை நீலகிரி மலை ரயிலில் இவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த டிரிப் வாடகை, 3 லட்சம் ரூபாய். மேலும், இந்த குழுவினர் மீண்டும் மேட்டுப்பாளையம் -குன்னுார் மற்றும் ஊட்டி -குன்னூர் மலை ரயில்களை தனியாக வாடகைக்கு எடுத்து பயணிக்க உள்ளனர்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us