sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் காப்பாற்ற பெற்றோர் கண்ணீர்

/

குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் காப்பாற்ற பெற்றோர் கண்ணீர்

குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் காப்பாற்ற பெற்றோர் கண்ணீர்

குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் காப்பாற்ற பெற்றோர் கண்ணீர்


ADDED : பிப் 22, 2024 02:46 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிட்டம்பட்டி:கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டி, அம்மன் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி, 45, டூ--வீலர் மெக்கானிக். இவர் மனைவி விஜயா, 45. இவர்களுக்கு, 10 வயதில் மகனும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இவரது, 3 வயது மகள் இனன்யாவுக்கு கடந்த, 16ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது.

பின், 18ம் தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டபோது, தர்மபுரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில், சிறுமிக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதியானது.

இதையடுத்து, கர்நாடக மாநிலம், பெங்களூரு ரெயின்போ மருத்துவமனையில் சிறுமியை சேர்த்தனர். சிறுமியின் பெற்றோர் கூறியதாவது:

கடந்த வாரம் வரை நன்றாக விளையாடிய எங்கள் குழந்தை, 5 நாட்களாக கண் விழிக்காமல் உள்ளது. ஒரு நாளைக்கு, ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது.

எங்கள் குழந்தையை காப்பாற்ற அரசும், பொதுமக்களும் உதவ வேண்டும். உதவ விரும்புவோர், 81228 80126 மற்றும் 93849 49656 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, எங்கள் குழந்தையை காப்பாற்றுங்கள்.

இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.






      Dinamalar
      Follow us