/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
குப்பையில் கிடந்த 12 பவுன் நகை; போலீசில் ஒப்படைத்த துாய்மைப்பணியாளருக்கு குவியும் பாராட்டு

UPDATED : மே 20, 2025 12:49 PM
ADDED : மே 20, 2025 01:17 AM

சேலம்: சேலம், பழைய சூரமங்கலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் மணிவேல், 50. இவர், 20வது கோட்ட துாய்மை பணியாளர். நேற்று காலை, ரெட்டியூர் அம்பேத்கர் தெருவில் குப்பை சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள குப்பை தொட்டியில் பிளாஸ்டிக் பை ஒன்றில், நகைகள் இருந்ததை பார்த்துள்ளார்.
மணிவேல், கண்காணிப்பாளர் குமரேசனுடன், சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் சென்று, நகையை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்தார். இதை ஆய்வு செய்த போது, 12.5 சவரன் நகை இருப்பது தெரியவந்தது. போலீசார், மணிவேலை வெகுவாக பாராட்டினர்.
இதனிடையே, சூரமங்கலம் ஸ்டேஷனில், ரெட்டிப்பட்டியை சேர்ந்த பொமிலா, தன் நகையை காணவில்லை என, சில தினங்களுக்கு முன் புகார் அளித்திருந்தார்.
இந்த நகை அவருடையதாக இருக்கலாம் என, நினைத்த போலீசார், பொமிலாவை வரவழைத்தனர். அவரிடம் நகையை காண்பித்து, அவருடையது தான் என, உறுதி செய்து ஒப்படைத்தனர்.