தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ குடியரசு தின விழா: விவசாயிக்கு ஜனாதிபதி அழைப்பு

 குடியரசு தின விழா: விவசாயிக்கு ஜனாதிபதி அழைப்பு

 குடியரசு தின விழா: விவசாயிக்கு ஜனாதிபதி அழைப்பு


ADDED : ஜன 13, 2026 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 12:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: புதுடில்லியில் நடைபெ றும் குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக, பாலக்காடைச் சேர்ந்த நெல் விவசாயிக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளியை சேர்ந்தவர் சுரேஷ், 75. இவர் மூலிகை தரம் கொண்ட 'நவர' என்ற அரிசியை, பாரம்பரிய முறையில் சாகுபடி செய்கிறார்.

கடந்த 2007ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்ட இந்த அரிசி ரக சாகுபடியை ஊக்குவிப்பதில் இவர் ஆற்றி வரும் பணிகளை, மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில், இவரை தபால் துறை ஊழியர்கள் சந்தித்து, குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வந்திருப்பதாக கூறி, அதற்கான அழைப்பிதழ் அவரிடம் வழங்கினர்.

இது குறித்து சுரேஷ் கூறுகையில், 'நான் சாதாரண விவசாயி. குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் ஜனாதிபதியிடமிருந்து வந்திருப்பது வியப்பாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் உள்ளது. இது, வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us