/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தி.மு.க.,வுக்கு பாதிரியார் ஓட்டு சேகரிப்பு; மக்கள் எதிர்ப்பு
/
தி.மு.க.,வுக்கு பாதிரியார் ஓட்டு சேகரிப்பு; மக்கள் எதிர்ப்பு
தி.மு.க.,வுக்கு பாதிரியார் ஓட்டு சேகரிப்பு; மக்கள் எதிர்ப்பு
தி.மு.க.,வுக்கு பாதிரியார் ஓட்டு சேகரிப்பு; மக்கள் எதிர்ப்பு
UPDATED : ஏப் 17, 2026 06:57 AM
ADDED : ஏப் 17, 2026 06:56 AM

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், புதுார் கிராமத்தில், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு சேகரிக்க சென்ற பாதிரியாருக்கு, மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அடுத்த புதுார் கிராமத்தில், மீனவ மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு, தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட்டை ஆதரித்து, அப்பகுதி பாதிரியார் அமல்ராஜ், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்கும்படி கூறிய பாதிரியாரிடம், 'எங்கள் ஓட்டு; எங்கள் உரிமை. கட்சி குறித்து பேசுவது பாதிரியாரின் வேலை கிடையாது. ஊரை நல்வழியில் கொண்டு செல்வதுதான் பாதிரியாரின் வேலை' எனக்கூறிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.