தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ காரை ஆம்புலன்ஸ் போல மாற்றி உயிர் காக்கும் ராஜஸ்தான் நபர்

 காரை ஆம்புலன்ஸ் போல மாற்றி உயிர் காக்கும் ராஜஸ்தான் நபர்

 காரை ஆம்புலன்ஸ் போல மாற்றி உயிர் காக்கும் ராஜஸ்தான் நபர்


ADDED : மே 04, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெய்ப்பூர்: விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவ, தன் காரை ஆம்புலன்ஸ் போல மாற்றி, 20 ஆண்டுகளாக ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த வரி ஆலோசகர் சேவை செய்து வருகிறார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள மாள்வியா நகரைச் சேர்ந்தவர் சந்தீப் குப்தா. வரி தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிபுணரான இவர், தன் சொந்தக் காரை ஆம்புலன்ஸ் போல் மாற்றி, விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு, 20 ஆண்டுகளாக உதவி செய்து வருகிறார்.

இது குறித்து சந்தீப் குப்தா கூறியுள்ளதாவது: ஜெய்ப்பூரில் உள்ள சட்டசபை வளாகம் அருகே, 22 ஆண்டுகளுக்கு முன் விபத்து ஒன்று நிகழ்ந்தது. அப்போது காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்சுக்காக காத்திருந்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் படுகாயம் அடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் என்னை கடுமையாக பாதித்தது.

எனவே, விபத்தில் காயமடைந்த யாரும் இனி ஆம்புலன்சுக்காக காத்திருக்க கூடாது என முடிவு செய்தேன்.

இதற்காக, என் காரை இலவசமாக ஆம்புலன்ஸ் போல் பயன்படுத்த முடிவு செய்தேன். காரில் முதலுதவி சிகிச்சைக்கு தேவையான பொருட்களை எப்போதும் வைத்திருப்பேன். தேவைப்பட்டால் சைரனும் ஒலிக்கும்; இதற்கு போலீசாரிடம் அனுமதி பெற்றுள்ளேன்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த சேவை செய்து வருகிறேன். இதுவரை, காயமடைந்த 120 பேரை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றுள்ளேன்; 35 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us