தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ரூ.1.21 கோடி ஜி.எஸ்.டி.,; பெண் ஊழியருக்கு 'ஷாக்'

ரூ.1.21 கோடி ஜி.எஸ்.டி.,; பெண் ஊழியருக்கு 'ஷாக்'

ரூ.1.21 கோடி ஜி.எஸ்.டி.,; பெண் ஊழியருக்கு 'ஷாக்'

1


UPDATED : ஜூன் 24, 2026 10:44 PM

ADDED : ஜூன் 24, 2026 01:24 AM

Follow on GoogleFavourite on Google

1

UPDATED : ஜூன் 24, 2026 10:44 PM ADDED : ஜூன் 24, 2026 01:24 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலுார்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா; தனியார் ஊழியர். இவர், வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் என் வங்கி கணக்கு உள்ளது. அண்மையில், வணிகவரித்துறையில் இருந்து எனக்கு கடிதம் ஒன்று வழங்கினர். அதில், 1.21 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வரி கட்ட வேண்டும் என, குறிப்பிட்டிருந்தனர்.

எனது பான் எண்ணை தவறாக பயன்படுத்தி, ஜி.எஸ்.டி., எண் பெற்று மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம். என் வங்கி கணக்கில் 4500 ரூபாய் கையிருப்பு இருந்த நிலையில், தற்போது கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்படுகிறேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us