sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

இரண்டாவது வளர்ப்பு மகளுக்கு திருமணம்; கண்கலங்கி வாழ்த்தினார் அரசு செயலர்

/

இரண்டாவது வளர்ப்பு மகளுக்கு திருமணம்; கண்கலங்கி வாழ்த்தினார் அரசு செயலர்

இரண்டாவது வளர்ப்பு மகளுக்கு திருமணம்; கண்கலங்கி வாழ்த்தினார் அரசு செயலர்

இரண்டாவது வளர்ப்பு மகளுக்கு திருமணம்; கண்கலங்கி வாழ்த்தினார் அரசு செயலர்

26


ADDED : பிப் 03, 2025 04:38 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:38 AM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம் : நாகையில் இயற்கை சீற்றத்தால் பெற்றோர், உறவுகளை இழந்த குழந்தைகளை, தன் குழந்தைகள் போல பாவித்து வளர்த்த அரசு முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று தன் வளர்ப்பு மகளுக்கு நடந்த திருமணத்தில் பங்கேற்று, கண் கலங்கி வாழ்த்தினார்.

நாகை மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடிச் சென்ற சுனாமியின் இரண்டாவது நாளில், கீச்சாங்குப்பம் கடலோரத்தில் 2 வயது குழந்தையின் அழுகுரல் கேட்டு, மீனவர்கள் குழந்தையை மீட்டு, அப்போது கலெக்டராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல், வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட இரண்டரை வயது குழந்தையும் கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரு குழந்தைகளையும் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிட்ட அவர், வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு சவுமியா என்றும், கீச்சாங்குப்பத்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு மீனா என்றும் பெயர் சூட்டினார்.

காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டாலும், நாள்தோறும் வேலை பளுவிற்கு இடையிலும் குடும்பத்துடன் சென்று சில மணி நேரங்களை குழந்தைகளுடன் செலவழித்தார்.

இதனால், அவர்கள் ராதாகிருஷ்ணனை, 'அப்பா' என்றும், அவரது மனைவி கிருத்திகாவை, 'அம்மா' என்றும் அழைத்தனர். பதவி உயர்வு பெற்று நாகையை விட்டுச் சென்றாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் காப்பகத்திற்கு வந்து குழந்தைகளை பார்த்தார்.

சவுமியாவும், மீனாவும், 18 வயதை எட்டியதால், காப்பகத்தில் தங்குவதில் நடைமுறை சிக்கல் இருந்ததால், ராதாகிருஷ்ணன் அனுமதியோடு, நாகை, கடற்கரை சாலையில் உள்ள மலர்விழி- -- மணிவண்ணன் தம்பதியினர் சவுமியாவை, மீனாவை தத்தெடுத்து வளர்த்தனர்.

இதில், மூத்தவரான சவுமியாவிற்கு திருப்பூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுபாஷ் என்பவருக்கு 2022 பிப்., 6ல், ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தனர். இளையவரான மீனாவுக்கு, நாகையைச் சேர்ந்த வங்கி ஊழியர் மணிமாறன் என்பவருடன் நேற்று நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் விமரிசையாக திருமணம் நடந்தது.

பெற்றோராய் இருந்து ராதாகிருஷ்ணன் - கிருத்திகா இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். வளர்ப்பு மகளுக்கு நடந்த திருமணத்தில் ஆனந்த கண்ணீர் பெருக ராதாகிருஷ்ணன் வாழ்த்தியதும், தம்பதியினர் அனைவரையும் வரவேற்று, உபசரித்ததும் அங்கிருந்தவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us