தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை; பாதிரியார் கைது

5


ADDED : அக் 19, 2026 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2026 07:39 AM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தட்சிண கன்னடா: கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் வலேன்சியா சர்ச் உள்ளது. சர்ச்சில் பாதிரியாராக இருந்தவர், சிப்ரியன் பின்டோ, 58. கடந்த ஆக., 14ம் தேதி, 15 வயது சிறுவன் ஒருவர் சர்ச்சிற்கு பிரார்த்தனை செய்ய சென்றார்.

அங்கு வரவேற்பு பகுதியில் இருந்த பின்டோ, சிறுவனிடம் பேசி தன் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அறைக்குள் சென்றதும், சிறுவனை கட்டிப்பிடித்து, சில்மிஷங்களில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக, தன் நண்பர்களிடம் சிறுவன் கூறியுள்ளார்.

அவர்களும், 'நாங்களும் இதுபோல பாதிக்கப்பட்டோம்' என கூறியுள்ளனர். இதுபோன்ற தொல்லை தொடர்ந்ததால், தன் பெற்றோரிடம் சிறுவன் விஷயத்தை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மங்களூரு தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையறிந்த சிப்ரியன் பின்டோ தலைமறைவானார். விசாரணையில், அவர் ஹாசன் மாவட்டம், சக்லேஷ்புராவில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. அங்கு சென்று அவரை கைது செய்த போலீசார், மங்களூரு அழைத்து வந்தனர். அவர் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us