sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

சர்வதேச பளு துாக்கும் போட்டி; தங்கம் வென்ற சிவகாசி பெண்

/

சர்வதேச பளு துாக்கும் போட்டி; தங்கம் வென்ற சிவகாசி பெண்

சர்வதேச பளு துாக்கும் போட்டி; தங்கம் வென்ற சிவகாசி பெண்

சர்வதேச பளு துாக்கும் போட்டி; தங்கம் வென்ற சிவகாசி பெண்

1


ADDED : டிச 12, 2025 01:11 AM

Google News

ADDED : டிச 12, 2025 01:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணா புரம் கண்ணா நகரை சேர்ந்தவர் அச்சக தொழில் செய்து வரும் தவசிக் குமார் 56. இவரது மனைவி பாண்டிமாதேவி 50. உணவியல் நிபுணராக உள்ளார்.

இந்தத் தம்பதியினரின் இரு மகன்களுக்கும் திருமணமாகி பேரன்கள் உள்ளனர். இந்நிலையில் பாண்டிமாதேவி நவ. 30ல் தாய்லாந்தில் நடந்த சர்வதேச அளவிலான பளு துாக்கும் போட்டிகளில் பங்கேற்றார். 20 நாடு களிலிருந்து 250க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவிலிருந்து சென்ற 19 பேரில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து இவர் கலந்து கொண்டார். வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில் 40 முதல் 50 வயதுக்குட்பட்டோருக்கான தனிப்பிரிவில் 310 கிலோ எடையை துாக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

பாண்டிமா தேவி கூறுகையில் ''சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையல்ல. 37 வயதிற்குப்பிறகு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் துாண்டப்பட்ட எனக்கு 50 வயதில் சர்வதேச பளு துாக்குதலில் தங்கப்பதக்கம் வென்றதை நினைத்து பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக பெருமிதம் கொள்கிறேன்.

கடந்த மூன்று ஆண்டாக இப்போட்டிக்கு தயாரானேன். ஏற்கனவே மாநில அளவில் 5 போட்டிகளிலும், தேசிய அளவில் 3 போட்டிகளிலும் தங்கம் வென்று தாய்லாந்து போட்டிக்கு தேர்வானேன். வரும் காலங்களில் பல்வேறு போட்டிகளில் சாதனை படைக்க ஆசைப்படுகிறேன்'' என்றார்.






      Dinamalar
      Follow us