/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
சிவன்மலை கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி நெல்
/
சிவன்மலை கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி நெல்
சிவன்மலை கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி நெல்
சிவன்மலை கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி நெல்
ADDED : பிப் 10, 2024 02:11 AM

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. முருக பக்தர்கள் கனவில் சுப்ரமணிய சுவாமி உத்தரவிடும் பொருள் இந்த பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுவது நுாற்றாண்டு கால வழக்கமாக உள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை முந்தைய பொருள் பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும்.
அதேசமயம் இந்தப்பெட்டியில் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவதாக அல்லது நடப்பதை முன்கூட்டி கணிப்பதாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடைசியாக கடந்த ஆக., மாதம் 14ம் தேதி முதல் பசுவுடன் கூடிய கன்று பொம்மை வைக்கப்பட்டது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த மகாராஜா 45, என்பவரின் கனவில் நிறைபடி நெல் வைத்து பூஜை செய்ய உத்தரவாக நேற்று முதல் நிறைபடி நெல் பெட்டியில் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து கோயில் சிவாச்சியர் ஒருவர் கூறும்போது, 'ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நிறைபடி நெல் இடம் பெற்றுள்ளதால் நாட்டில் வேளாண்மை செழிக்கும். அரிசி மற்றும் நெல் விலையில் மாற்றம் வரும்' என்றார்.