/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தெற்கு ரயில்வே முதல் திருநங்கை: டிக்கெட் பரிசோதகர் சிந்து
/
தெற்கு ரயில்வே முதல் திருநங்கை: டிக்கெட் பரிசோதகர் சிந்து
தெற்கு ரயில்வே முதல் திருநங்கை: டிக்கெட் பரிசோதகர் சிந்து
தெற்கு ரயில்வே முதல் திருநங்கை: டிக்கெட் பரிசோதகர் சிந்து
ADDED : பிப் 18, 2024 11:50 PM

திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரியும் திருநங்கை சிந்து தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற சிறப்பை பெற்றார்.
திருநங்கைகள் சமூகத்தில் தங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்க போராடி வருகின்றனர். சிலர் திறமையால் சாதித்து வருகின்றனர். சுயதொழில் மட்டுமின்றி மத்திய, மாநில அரசு பணிகளிலும் திருநங்கைகள் அசத்தி வருகின்றனர். அந்த வரிசையில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து பிப்.,8ல் பதவி ஏற்றார். மக்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் 19 ஆண்டுகளுக்கு முன் 2003 ல் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்தார். 14 ஆண்டுகளுக்கு முன் மதுரை கோட்டத்துக்குட்பட்ட திண்டுக்கல் ஸ்டேஷனில் மின் பிரிவில் பணிபுரிந்தார். இந்நிலையில் ஒரு சிறிய விபத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் தொழில்நுட்ப பிரிவில் சிந்துவால் பணிபுரிய முடியவில்லை.
எனவே தொழில்நுட்பம் இல்லாத பணியில் தொடர்ந்தார். தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், ரயில்வே அலுவலக பணியாளர்கள் அளித்த ஊக்கத்தால் டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்து தற்போது பரிசோதகராக நியமனம் பெற்றார்.
கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் கொண்டு திருநங்கைகள் முன்னேற வேண்டும் என சிந்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

