/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
தாம்பாள தட்டின் மீது நின்று இடைவிடாமல் பரதம்
/
தாம்பாள தட்டின் மீது நின்று இடைவிடாமல் பரதம்
ADDED : ஜன 29, 2024 12:01 AM

ராமநாதபுரம் : உலக சாதனை நிகழ்ச்சிக்காக 161 மாணவிகள் தாம்பாள தட்டின் மீது நின்று இடைவிடாமல் 40 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடிய நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடந்தது.
ராமநாதபுரம் ஜெய் நடனாலயா பரதநாட்டிய பயிற்சி பள்ளி சார்பில் இங்குள்ள வேலுமனோகரன் கலை-அறிவியல் கல்லுாரி வளாகத்தில் ஒரே நேரத்தில் 161 பேர் , தாம்பாள தட்டுகளின் மீது ஏறி நின்று பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவிகள் தொடர்ந்து 40 நிமிடம் 11 பாடல்களுக்கு பரதம் ஆடினர்.
இதை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தினர் உலக சாதனை நிகழ்ச்சிக்காக பதிவு செய்தனர். உலகிலேயே முதல் முறையாக இச்சாதனை நிகழ்ச்சி நடந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.