தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்பு தானம்

விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்பு தானம்

விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்பு தானம்


UPDATED : அக் 19, 2013 12:33 AM

ADDED : அக் 19, 2013 12:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2013 12:33 AM ADDED : அக் 19, 2013 12:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:விபத்தில் காயமடைந்த புதுச்சேரி இன்ஜினியரிங் மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.புதுச்சேரி, தேங்காய்திட்டைச் சேர்ந்த புகழேந்தியின் மகன் கபில்தேவ், 19. புதுச்சேரி கல்லூரியில், இரண்டாம் இண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். 12ம் தேதி, தேர்வு எழுதி விட்டு, வில்லியனூர் பைபாஸ் சாலை வழியாக, டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, லாரி மோதியதில் பலத்த காயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் முன்னேற்றமின்றி, நேற்று மூளைச்சாவு நிலையை அடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கபில்தேவின் உடல் உறுப்புக்களை உறவினர்கள் தானம் செய்துள்ளனர். இதன்படி, கபில்தேவின், இரண்டு கண்கள், இரண்டு கிட்னி, கணையம் உள்ளிட்ட, ஏழு உடல் உறுப்புகள் தானம் செயப்பட்டுள்ளன. இதுகுறித்து, கபில்தேவின் அண்ணன் வினோத் கூறுகையில், ''இன்ஜினியராகி, வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன் ஆசை நிறைவேறவில்லை. அவனது உடல் உறுப்புக்களாவது, ஏழைகளுக்கு பயன்படட்டும் என, தானம் செய்துள்ளோம். மற்றவர்கள் மூலம் என் தம்பி உயிர் வாழ்வான்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us