/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கணக்கு பாடம் என்றாலே பின்வாங்கும் மாணவர்கள்; நுண்ணறிவு திறன் இல்லாமல் போகும் அச்சம்
/
கணக்கு பாடம் என்றாலே பின்வாங்கும் மாணவர்கள்; நுண்ணறிவு திறன் இல்லாமல் போகும் அச்சம்
கணக்கு பாடம் என்றாலே பின்வாங்கும் மாணவர்கள்; நுண்ணறிவு திறன் இல்லாமல் போகும் அச்சம்
கணக்கு பாடம் என்றாலே பின்வாங்கும் மாணவர்கள்; நுண்ணறிவு திறன் இல்லாமல் போகும் அச்சம்
UPDATED : செப் 12, 2025 02:17 PM
ADDED : செப் 11, 2025 09:37 PM

கோவை; கல்லுாரிகளில் கணிதவியல் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால், நவீன தொழில்நுட்பங்களில் மேம்படுத்திக் கொள்ள முடியாமலும், போட்டித்தேர்வுகளில் வெல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில், கணக்கு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கொண்டாடி வந்த காலம் போய், இன்று, பல பள்ளிகள் அளவிலேயே கணிதப்பிரிவு எடுத்து படிக்க மாணவர்கள் தயங்குகின்றனர். வகை நுண் கணிதம், தொகை நுண் கணிதம் ஆகியவை, சில பள்ளிகளில் கற்றுத்தராத நிலையே உள்ளது.
கல்லுாரிகளில் பொறியியல் படிக்கும் எண்ணம் கொண்ட மாணவர்கள், பள்ளிகளில் கணிதம் படிக்கும் நிலையில், அரசு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் சில தனியார் கல்லுாரிகளில், சமீப காலமாக, கணிதவியல் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு கலை கல்லுாரியில், கடந்தாண்டு 90 பேர் சேர்ந்த நிலையில், நடப்பாண்டு 70 பேர், கணிதவியல் படிக்கின்றனர். மேட்டுப்பாளையம் அரசு கல்லுாரியில், கடந்தாண்டு 22 பேர் படித்த நிலையில், நடப்பாண்டு 16 பேர் படிக்கின்றனர்.
கோவை அரசு கலை கல்லுாரி கணிதத்துறை இணை பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:
பொறியியல் படிக்கும் ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே, பள்ளி அளவில் கணிதப் பிரிவு எடுத்து படிக்கின்றனர். பெற்றோர் சிலர், தங்கள் குழந்தைகளுக்கு கணிதம் வராது என்றும், அது மிகவும் கடினம் என்று சொல்லியே, அறிவியல் பாடப்பிரிவில் சேர்க்கின்றனர். கணிதம் கடினம் இல்லை என்று, பள்ளிகள் அளவிலேயே மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத்துறை பணியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால், கணிதவியல் படிப்பில் சேர ஆர்வம் குறைகிறது. கல்வித்துறையில் கணித ஆசிரியர், பேராசிரியர் என ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்து, மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் போன்ற துறைகளில் சாதிக்க முக்கியமானது கணிதம். தங்கள் நுண்ணறிவு திறனை வளர்த்துக் கொள்ளவும் கணிதம் முக்கியம். டி.என்.பி.எஸ்.சி., -- எஸ்.எஸ்.சி., வங்கி, ரயில்வே உட்பட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்றால், கணிதம் மிக அவசியம். இதை படிக்க மாணவர்கள் போதியளவு ஆர்வம் காட்டாதது, பிற்காலத்தில் கணித ஆசிரியர் எண்ணிக்கை குறையவும், போட்டித் தேர்வெழுதும் மாணவர்கள் எண்ணிக்கையும், திறன் சார்ந்த மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து விடும்.
இவ்வாறு, அவர் கூறினார்.