உள்ளடக்கத்திற்கு செல்ல

மாணவர்களுக்கு தன் செலவில் முடி திருத்தம் செய்த ஆசிரியர்
மாணவர்களுக்கு தன் செலவில் முடி திருத்தம் செய்த ஆசிரியர்
UPDATED : ஜூன் 10, 2026 12:42 PM
ADDED : ஜூன் 10, 2026 05:21 AM

அ நிறம் | அளவு
நாட்றம்பள்ளி: திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
மாணவர்களிடையே ஒழுக்கத்தை வளர்க்கும் நோக்கில், கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறந்த ஜூன், 4ம் தேதி, முடி திருத்தம் செய்து வராத மாணவர்களை, பள்ளி வார விடுமுறை முடிந்து, முடி திருத்தம் செய்து வர, உடற்கல்வி ஆசிரியர் பழனி அறிவுறுத்தினார். அதை பொருட்படுத்தாமல், மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வந்தனர்.
இதையடுத்து, ஆசிரியர் பழனி, தன் சொந்த செலவில், இரண்டு முடி திருத்தும் தொழிலாளர்களை, பள்ளிக்கு வரவழைத்து, பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்ய வைத்தார். ஆசிரியரின் இந்தசெயலுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
