தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ தக்காளிக்கு மாற்றாக 'தாள்'; திருச்சி பேராசிரியை அசத்தல்

தக்காளிக்கு மாற்றாக 'தாள்'; திருச்சி பேராசிரியை அசத்தல்

தக்காளிக்கு மாற்றாக 'தாள்'; திருச்சி பேராசிரியை அசத்தல்


ADDED : அக் 22, 2024 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 07:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி : தக்காளி விளைச்சல் குறைந்து, விலை உயர்ந்திருக்கும் போது, சமையலில் பயன்படுத்தும் வகையில், திருச்சி, ஜமால் முகமது கல்லுாரி துணைப் பேராசிரியர், 'தக்காளி தாள்' என்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருளை உருவாக்கி அசத்தியுள்ளார்.

திருச்சி, ஜமால் முகமது கல்லுாரியில், உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறையின் துணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் சங்கீதா, 'தக்காளி தாளை உருவாக்கி, கல்லுாரி முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினம், செயலர் காஜா நஜ்முதீன், கிரியா நிறுவனர் சிவபாலன், உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை தலைவர் கவுஸ் பாஷா முன்னிலையில், அறிமுகப்படுத்தி உள்ளார்.

இது குறித்து, துணைப் பேராசிரியர் சங்கீதா கூறியதாவது:

தக்காளி பழங்கள் விலை குறைவாக இருக்கும் போது, அவற்றை வாங்கி சுத்தம் செய்து, தோல் மற்றும் விதைகளை நீக்கி, கூழாக்கி, மென்மையாக அரைத்து சீராகப் பரப்பி, உலர்த்தி, தரமான, 'தக்காளி தாள்' கள் தயாரிக்கப்படுகின்றன.

விலை உயர்வாக இருக்கும் காலத்தில், அந்த தாளை துண்டுகளாக்கி சமையலுக்கு பயன்படுத்தலாம். இதனால், இதன் தரம், சுவை, சத்துகள் குறையாது. இந்த தக்காளி தாள்களை காற்று புகாத பைகளில் வைத்து, மூன்று மாதம் வரை பயன்படுத்தலாம். குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாத்தும் பயன்படுத்தலாம்.

தக்காளி தாள்களை, விவசாயிகள் வீடுகளிலேயே எளிமையாக தயாரிக்கலாம், விற்கலாம்.

தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன நிபுணர்கள், இந்த தக்காளி தாள்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us