/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
2 செ.மீ., மினி தேங்காய்; வியப்பில் ஆழ்ந்த விவசாயி
/
2 செ.மீ., மினி தேங்காய்; வியப்பில் ஆழ்ந்த விவசாயி
ADDED : நவ 11, 2024 12:13 AM

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நரிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன், 60; விவசாயி. இவரது தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரத்தில் இருந்து, மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்றை எடுத்து, அதன் மட்டையை நேற்று உரித்துள்ளார்.
அப்போது, வழக்கமான அளவில் ஒரு பெரிய தேங்காய் இருந்தது. மேலும், அதனுடன் தேங்காய் மட்டையில், குட்டி தேங்காய் ஒன்று, ஒட்டிக்கொண்டு இருப்பதை பார்த்தார்.
அது வழக்கமான தேங்காய் போல விளைந்து காணப்பட்டது. அந்த தேங்காய், 2 செ.மீ., நீளம் மட்டுமே இருந்தது.
இது குறித்து அறிந்த கிராமத்தினர், அந்த குட்டி தேங்காயை, ஆச்சரியமாக பார்த்து சென்றனர். இந்த தேங்காயை நாங்களே பாதுகாத்து வைத்து கொள்ள போகிறோம் என காசிநாதன் தெரிவித்தார்.