தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ அறிவாலயத்தில் வெற்று பந்தலான வெற்றி பந்தல்

 அறிவாலயத்தில் வெற்று பந்தலான வெற்றி பந்தல்

 அறிவாலயத்தில் வெற்று பந்தலான வெற்றி பந்தல்


ADDED : மே 05, 2026 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2026 02:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும் என கருதிய அக்கட்சி நிர்வாகிகள், சென்னை அறிவாலயத்தில் வெற்றி பந்தல் அமைத்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும், தி.மு.க., தோல்வி முகம் கண்டதால், அது வெற்று பந்தலாக மாறியதால், உடனடியாக அதை அகற்றி விட்டனர்.

நேற்று காலையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கும்போது, மாநில நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், பூச்சி முருகன், துறைமுகம் காஜா உட்பட, 200க்கும் மேற்பட்டோர் அறிவாலயம் வந்தனர்.

ஓட்டு எண்ணிக்கை துவங்கும் முன், 10,000 வாலா பட்டாசுகள், லட்டு உள்ளிட்ட இனிப்பு வகைகளை அறிவாலயத்திற்கு கொண்டு வந்தனர். தபால் ஓட்டு எண்ணிக்கையின்போது தி.மு.க.,வுக்கு இறங்குமுகம் என தெரிய வந்ததும், அறிவாலயத்தில் கூடியிருந்த நிர்வாகிகள் சோகம் அடைந்தனர்.

தபால் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, முதல் சுற்று, இரண்டாவது சுற்று ஆரம்பித்ததும், தி.மு.க.,வுக்கு பின்னடைவு என தெரிய வந்ததும், அக்கட்சியினர் கவலையோடு வெளியேறினர்.

மாநில நிர்வாகிகளும், 'இனிமேல் அறிவாலயத்தில் இருந்தால் சரியாக இருக்காது' என, அங்கிருந்து வெளியேறி விட்டனர். வெற்றி பந்தலும் வெற்று பந்தலாக மாறியதால், அதை உடனடியாக அகற்றி விட்டனர். தி.மு.க., வெற்றியடைந்தால், கட்சியினரின் கொண்டாட்ட காட்சிகளை பார்க்க வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்.இ.டி., திரைகளும் அகற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us