/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
கத்தியால் குத்த முயன்றவரிடம் பெல்ட்டை சுழற்றி தப்பிய ஏட்டு
/
கத்தியால் குத்த முயன்றவரிடம் பெல்ட்டை சுழற்றி தப்பிய ஏட்டு
கத்தியால் குத்த முயன்றவரிடம் பெல்ட்டை சுழற்றி தப்பிய ஏட்டு
கத்தியால் குத்த முயன்றவரிடம் பெல்ட்டை சுழற்றி தப்பிய ஏட்டு
ADDED : ஜன 01, 2026 03:19 AM

திருப்பூர்: திருப்பூரில், கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் ஏட்டுவை, கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில், மாநகர போலீசார் நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு, 7:00 மணிக்கு, அப்பகுதிக்கு வந்த நபர், மக்கள் மத்தியில் அநாகரிகமாக நடந்தார்.
பணியில் இருந்த தெற்கு போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ் ஏட்டு ராமகிருஷ்ணன் என்பவர், அந்த நபரிடம் பேசாமல் செல்ல அறிவுறுத்தினார். உடனே, போலீஸ் ஏட்டுடன் தகராறில் ஈடுபட்ட அந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து, குத்த முயன்றார்.
உடனே, சாமர்த்தியமாக, அந்த நபரிடம் இருந்து விலகிய ஏட்டு, தான் அணிந்திருந்த பெல்ட்டை கழற்றி, அதை சுழற்றி தடுத்தார். அங்கிருந்த மற்ற போலீசார் விரைந்து வந்து, அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்த போது, சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்த இளங்கோ, 45, என்பது தெரிந்தது.
திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: போலீசை தாக்க முயன்ற நபர், மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர், கடந்த, 2020ம் ஆண்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்த வாகனத்தை சேதப்படுத்தியது தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர். இவ்வாறு அவர் கூறினார்.

