UPDATED : மார் 31, 2026 03:08 AM
ADDED : மார் 31, 2026 12:05 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே சோழபுரம் மேலத்தெரு பூஜாரி பெரியசாமி 70. இவர் அங்குள்ள கோயிலில் பணிபுரிந்தார். 2024 செப்., 13ல் கோயிலுக்கு வந்த 9 வயது சிறுமி, 10 வயது சிறுவன், 12 வயது சிறுவன் மூவரையும் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி சிவகங்கை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவரை கைது செய்தனர்.
சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல்முருகன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. 2 சிறுவர்கள், சிறுமியை பலாத்காரம் செய்ததற்காக 178 ஆண்டு சிறை தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிப்பதோடு,ரூ.8000 அபராதமும்விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவர்கள், சிறுமி மூவருக்கும் அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
178 ஆண்டு சிறை தண்டனை
சிறுவர்களை காயப்படுத்தியதற்கு 2 ஆண்டு சிறை, ரூ.500 அபராதம், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 4 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம், மிரட்டியதற்காக 2 ஆண்டு சிறை, ரூ.500 அபராதம், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 60 ஆண்டு சிறை, ரூ.2000 அபராதம், மற்றொரு பாலியல் வழக்கிற்கு 20 ஆண்டு சிறை, ரூ.1000 அபராதம், மதிப்பிற்குரிய இடத்தில் இருந்து தவறை செய்த குற்றத்திற்கு 90 ஆண்டு சிறை, ரூ.3000 அபராதமும் என ஒட்டு மொத்தமாக 178 ஆண்டு சிறை, ரூ.8000 அபராதம் விதிக்கப்பட்டது.
