தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ஊர் பெயருக்கு பதில் த.வெ.க. பெயர்; 'ஹேக்' செய்யப்பட்ட அரசு பஸ்

ஊர் பெயருக்கு பதில் த.வெ.க. பெயர்; 'ஹேக்' செய்யப்பட்ட அரசு பஸ்

ஊர் பெயருக்கு பதில் த.வெ.க. பெயர்; 'ஹேக்' செய்யப்பட்ட அரசு பஸ்


ADDED : ஏப் 09, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 04:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சின் டிஜிட்டல் பெயர் பலகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் ஆங்கிலத்தில் ஒளிபரப்பானது. பஸ்சின் வைபை ஹேக் செய்யப்பட்டு இவ்வாறு நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இதை கண்ட பயணி ஒருவர் தனது அலைபேசியில் வீடியோ எடுத்தார். பஸ் டிரைவர் உடனடியாக டிஜிட்டல் பலகையில் எழுத்துக்களை மாற்றினார். சில நாட்களுக்கு முன் தேனி மாவட்டத்திலும் இதே போல் அரசு பஸ் டிஜிட்டல் பலகையில் தமிழக வெற்றிக் கழகம் என பெயர் ஒளிபரப்பானது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பஸ்களின் பெயர்பலகை ஒளிரும் எழுத்துக்கள் பென்டிரைவில் ப்ரோக்ராம் செய்யப்பட்டு தரப்படுகிறது. இந்த பஸ்களில் செல்லுமிடம் தெரிவதற்காக ஜி.பி.எஸ். இணைப்பு உள்ளது. அதற்கு வைபை தேவை. இதன் பராமரிப்பை தனியார் நிறுவனம் செய்கிறது. வைபை மூலம் இதை ேஹக் செய்து இந்த எழுத்துக்களை சேர்த்திருக்கலாம். அது குறித்து விசாரித்து வருகிறோம், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us