தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/அமெரிக்க அதிபர் டிரம்ப் தோற்றத்தில் எருமை

அமெரிக்க அதிபர் டிரம்ப் தோற்றத்தில் எருமை

அமெரிக்க அதிபர் டிரம்ப் தோற்றத்தில் எருமை


UPDATED : மே 19, 2026 05:20 AM

ADDED : மே 19, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2026 05:20 AM ADDED : மே 19, 2026 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாக்கா: வங்கதேசத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போலவே தோற்றமளிக்கும் ஒரு அரிய வகை எருமை மாடு, இணையதளத்தில் வேகமாக பரவி, மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவுக்கு அருகில் உள்ள நாராயணகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில், அல்பினோ என்ற வெளிர் நிறமுடைய எருமை மாடு ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.

சுமார் 3.5 வயது கொண்ட இந்த எருமை 700 கிலோ எடை கொண்டது. இந்த எருமையின் தலையில் உள்ள பொன்நிற முடியும், அதன் முக அமைப்பும் அச்சு அசலாக அமெரிக்க அதிபர் டிரம்பின் ஹேர் ஸ்டைல் மற்றும் அவரின் தோற்றத்தை நினைவூட்டுவதால், இதற்கு டொனால்டு டிரம்ப் என பெயரிடப்பட்டுள்ளது.

இதே பண்ணையில் 750 கிலோ எடை கொண்ட மற்றொரு அல்பினோ எருமைக்கு, அதன் ஆக்ரோஷமான குணம் மற்றும் கோபமான நடத்தை காரணமாக மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் கண் மற்றும் முடி நெதன்யாகுவை ஒத்து இருப்பதால், இப்பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us