தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ அரசு பஸ் 'டிஜிட்டல்' பலகையில் விஜய் கட்சியின் விளம்பரம்

 அரசு பஸ் 'டிஜிட்டல்' பலகையில் விஜய் கட்சியின் விளம்பரம்

 அரசு பஸ் 'டிஜிட்டல்' பலகையில் விஜய் கட்சியின் விளம்பரம்


ADDED : ஏப் 07, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 04:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அரசு பஸ் ஒன்றில் வழித்தடம், ஊர் பெயரை காட்டும் 'டிஜிட்டல்' பலகையில், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியின் பெயர் இடம் பெற்றிருந்தது சர்ச்சையானது. இது குறித்து விசாரணை நடந்து வருவதாக, அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்தில், திருச்சி கோட்டம் சார்பில் இயக்கப்படும், 'டி.என்., 45எம் 4853' என்ற பதிவெண் கொண்ட வெளியூர் பஸ், திண்டுக்கல், திருச்சி, தேனி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படுகிறது.

இந்த பஸ்சின் மேற்பகுதியில் உள்ள டிஜிட்டல் பலகையில், பஸ் எண் மற்றும் வழித்தடம் விபரங்கள் இடம் பெறும்.

ஆனால், எதிர்பாராத விதமாக அந்த பலகையில் ஊர் பெயர்களுக்கு பதிலாக, நேற்று முன்தினம், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர் ஆங்கிலத்தில் ஒளிர்ந்தது.

இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் பயணியர், அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அரசு பஸ்சில் நடிகர் விஜயின் அரசியல் கட்சி பெயர் எப்படி வந்தது என சர்ச்சை எழுந்தது.

இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட விளக்கம்:

இந்த சம்பவம், போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் கவனத்திற்கு வந்ததும், அந்த பஸ்சின் டிஜிட்டல் பலகை உடனடியாக அணைக்கப்பட்டது.

பின், முதன்மை சுற்றுப்பலகை முழுமையாக மாற்றப்பட்டு, சரியான வழித்தட விபரங்கள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டன.

முதல்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள், பஸ்சின் டிஜிட்டல் பலகையை இயக்கும் மென்பொருளை 'ஹேக்' செய்து, தவறான வாசகங்களை பதிவிட்டது தெரிய வந்துள்ளது. இனி வரும் காலங்களில் இத்தகைய பாதுகாப்பு மீறல்கள் நடக்காமல் இருக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மென்பொருளை சிதைத்து, இத்தகைய செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கவும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மின்னணு வழித்தட பலகைகளை வினியோகம் செய்யும் மற்றும் பராமரிக்கும் சேவை நிறுவனத்திடம், தொழில்நுட்ப பாதுகாப்பை பலப்படுத்தவும், எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நிகழாமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us