தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம்: தி.மு.க., நிர்வாகிகள் கோஷம்

 ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம்: தி.மு.க., நிர்வாகிகள் கோஷம்

 ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம்: தி.மு.க., நிர்வாகிகள் கோஷம்


ADDED : டிச 25, 2025 01:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2025 01:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கரூர் குளித்தலையில் நடந்த, தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டத்தில், ஸ்டாலின் அரசை கண்டித்து, கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.

நுாறு நாள் வேலை திட்டம் மாற்றத்தை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில்,நேற்று தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கோஷங்களை எழுப்பிய, வி.சி., நிர்வாகி, 'கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம், ஸ்டாலின் அரசை கண்டிக்கின்றோம்' எனக் கோஷமிட, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்டோர், அதை திரும்ப கூறினர்.

அதன்பின் சுதாரித்த, தி.மு.க., நிர்வாகி, கோபத்துடன் வி.சி., நிர்வாகியிடம் இருந்து மைக்கை பிடுங்கி, மற்றொருவரிடம் வழங்கினார். அவர், ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம், மோடிக்கு வால் பிடிக்கும் ஆர்ப்பாட்டம், 100 நாள் வேலையை நிறுத்த துடிக்கும் ஆர்ப்பாட்டம் எனக் கோஷமிட, மற்றவர்கள் கோஷமிடலாமா, வேண்டாமா என தவிக்க, கூட்டத்தில் பெண்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us