/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
அரசு பஸ்சில் கழன்றோடிய சக்கரங்கள்! டிரைவர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

ADDED : அக் 01, 2025 03:07 AM

வேடசந்துார்: திண்டுக்கல்லில் இருந்து வேடசந்துார் சென்ற அரசு பஸ்சின் பின் சக்கரங்கள் கழன்றோடிய நிலையில் டிரைவர் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வேடசந்துார் அரசு போக்குவரத்துக் கழக டெப்போவில் இருந்து நேற்று முன் தினம் மதியம் 2:00 மணிக்கு புறப்பட்ட அரசு பஸ் மதுரை, கோவை சென்று விட்டு மீண்டும் நேற்று காலை 10:00 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து வேடசந்துார் நோக்கி வந்தது. தாடிக்கொம்பு உண்டார்பட்டியை சேர்ந்த முருகன் டிரைவராகவும், கரூர் சிவசுப்பிரமணியன் நடத்துநராகவும் பணியில் இருந்தனர். 8 பயணிகள் இருந்தனர்.
காக்கா தோப்பூர் பிரிவு அருகே வளைவில் திரும்பும்போது வலது பக்கத்தில் உள்ள பின் சக்கரங்கள் இரண்டும் கழன்று ரோட்டில் ஓடியது. பயங்கர சத்தத்துடன் தரையில் இழுத்தப்படி சிறிது துாரம் சென்று நின்றது. டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
முறையான பராமரிப்பு செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.