தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/‛விசில் சத்தம் கேட்கக்கூடாது: தி.மு.க., கவுன்சிலர் 'அட்ராசிட்டி'

‛விசில் சத்தம் கேட்கக்கூடாது: தி.மு.க., கவுன்சிலர் 'அட்ராசிட்டி'

‛விசில் சத்தம் கேட்கக்கூடாது: தி.மு.க., கவுன்சிலர் 'அட்ராசிட்டி'


ADDED : பிப் 11, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 01:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: நடிகர் விஜயின் த.வெ.க.,விற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், சிவகங்கை நகராட்சி துாய்மை பணியாளர்கள், 'விசில்' ஊதி குப்பை சேகரிக்க தி.மு.க., கவுன்சிலர் தடை விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நகராட்சி, 21வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் அயூப்கான். இவரது வார்டில் 18 தெருக்கள் உள்ளன. இங்கு நகராட்சி துாய்மை பணியாளர்கள் இருவர் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். வீடுகளில் குப்பை சேகரிக்கும் போது, இவர்கள் வந்துள்ளதை 'விசில்' ஊதி மக்களுக்கு தெரியப்படுத்துவர்.

நேற்று குப்பை சேகரிக்க வந்த துாய்மை பணியாளர்களிடம், அயூப்கான், 'இனிமேல் எங்கள் வார்டில் விசில் சத்தம் கேட்கக்கூடாது' என்றுகூறி, அவர்கள் பயன்படுத்திய விசிலை வாங்கி குப்பையில் போட்டுவிட்டு, ஸ்பீக்கருடன் கூடிய கை 'மைக்'கை வழங்கிவிட்டு, 'இனிமேல் விசில் ஊதக்கூடாது; மைக் பயன்படுத்தி தான் குப்பைகளை சேகரிக்க வேண்டும்' என, கண்டிப்புடன் கூறினார். இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us