தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ இன்ஜின் ஆயில் குடித்து வாழும் தொழிலாளி

இன்ஜின் ஆயில் குடித்து வாழும் தொழிலாளி

இன்ஜின் ஆயில் குடித்து வாழும் தொழிலாளி


UPDATED : ஜூலை 28, 2026 09:28 AM

ADDED : ஜூலை 28, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2026 09:28 AM ADDED : ஜூலை 28, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்; கர்நாடகா மாநிலம், சிவமொக்கா பகுதியை சேர்ந்தவர் குமார், 48. பெங்களூரு ஜாலஹள்ளி கிராஸ் பகுதியில் தங்கி, கூலிவேலை செய்-கிறார். இவர் கடந்த, 22 ஆண்டுகளாக, மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய இன்ஜின் ஆயிலை குடித்து வருகிறார். இருமுடி கட்டி சபரிமலை செல்லும் இவர், நேற்று மாலை ஓசூர் வந்தார். ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு கடையில் டீ சாப்பிட்டார்.

அதன் பின், தன் பாக்கெட்டில் இருந்த இன்ஜின் ஆயில் பாட்டிலை எடுத்து, பொதுமக்கள் முன்னி-லையில், வேகமாக குடித்தார். இது குறித்து குமார் கூறுகையில், ''தினமும், 8 லிட்டர் வரை பழைய இன்ஜின் ஆயிலை குடிக்-கிறேன். அதனால் என்னை ஆயில் குமார் என, அனைவரும் அழைக்கின்றனர். மெக்கானிக் கடைகளில் சென்று, பழைய இன்ஜின் ஆயிலை வாங்கி கொள்வேன். எப்போதாவது ஒருமுறை, டீ குடிப்பேன். மற்ற உணவுகளை சாப்பிட்டால், உடல் ஏற்றுக்கொள்ளாது என்பதால், உணவு-களை தவிர்த்து விடுகிறேன்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us