சத்துமாவில் நௌிந்த புழுக்கள்; அங்கன்வாடியில் கர்ப்பிணியர் 'ஷாக்'
சத்துமாவில் நௌிந்த புழுக்கள்; அங்கன்வாடியில் கர்ப்பிணியர் 'ஷாக்'
ADDED : மார் 28, 2026 02:31 AM

வேலுார்: அங்கன்வாடியில் வழங்கப்பட்ட சத்துமாவில் புழுக்கள் இருந்ததால், கர்ப்பிணியர் அதிர்ச்சியடைந்தனர்.
வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள ஓர் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட ஊட்டச்சத்து மாவில், புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.
அதில், ஊட்டச்சத்து மாவு பாக்கெட்டில் உற்பத்தி தேதி, ஜன., மாதம் என்றும், காலாவதி தேதி, வரும் ஏப்., 30 என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
பாக்கெட்டை திறந்து பார்த்தபோது, ஊட்டச்சத்து மாவு கெட்டுப்போய் வண்டுகளும், புழுக்களும் இருந்ததாக பயனாளிகள் தெரிவித்தனர். இது, கர்ப் பிணியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாவை, குழந்தைகளும் சாப்பிடுகின்றனர். 'இதனால், தாய்மார்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவர். இது தொடர்பாக வேலுார் மாவட்ட சத்துணவு துறை அதிகாரிகள், உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
