தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ஆபீசுக்கு சீக்கிரம் வந்ததால் இளம் பெண் பணி நீக்கம்

ஆபீசுக்கு சீக்கிரம் வந்ததால் இளம் பெண் பணி நீக்கம்

ஆபீசுக்கு சீக்கிரம் வந்ததால் இளம் பெண் பணி நீக்கம்


ADDED : டிச 13, 2025 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2025 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்ரிட்: வழக்கமாக வேலைக்கு தாமதமாக வந்தால், ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், பணி நேரத்துக்கு 40 நிமிடங்கள் முன்னதாகவே தினமும் வந்த இளம் பெண் ஒருவரை, அவர் பணியாற்றிய நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இதை எதிர்த்து அப்பெண் தொடர்ந்த வழக்கில், அவருக்கு எதிராகவே நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் உள்ள ஒரு நிறுவனத்தில், 22 வயது இளம் பெண் ஒருவர் பணியாற்றினார். அவரது பணி நேரம் காலை 7:30 மணிக்கு துவங்குகிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் காலை 6:45 முதல் 7:00 மணிக்குள்ளாகவே அலுவலகம் வந்துள்ளார்.

முன்னதாக வரவேண்டாம் என நிர்வாகம் பலமுறை எச்சரித்தும், அதை அப்பெண் பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, நிர்வாகம், அவர் மீது ஒழுங்கீன நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து நீக்கியது.

இதை எதிர்த்து அப்பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதை மீறி பணி நேரத்துக்கு முன்பாகவே வந்துள்ளார் என நிர்வாகம் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. மேலும், முன்ன தாகவே வந்தாலும், எந்த வேலையும் செய்யவில்லை என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஊழியர் ஒருவர் எவ்வளவு தான் ஆர்வமாக இருந்தாலும், நிறுவனத்தின் நேர கட்டுப்பாடுகளை மீறுவது பணி நீக்கத்துக்கு சரியான காரணம் என்றும், ஸ்பெயின் தொழி லாளர் சட்டத்தை அப்பெண் மீறியுள்ளதாகவும் கூறி, நிர்வாகத்தின் பணி நீக்க உத்தரவை உறுதிசெய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us