PUBLISHED ON : ஆக 16, 2024 12:00 AM

தமிழகத்திற்கே தலைகுனிவு!
எஸ்.ஆர்.ெஹன்றி, லீசெஸ்டர், லண்டனிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுக்க சிலர் திட்டமிட்ட விஷயத்தில், சென்னை உயர் நீதிமன்றம்
தலையிட்டு, 'பஞ்சாயத்து' செய்து,'சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுப்பது அவமானச் செயல்; அவ்வாறு தடுப்பவர்களை,
குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது' என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இவ்விவகாரம்,
தமிழகத்துக்கே தலைகுனிவு என்று தெரியவில்லையா அரசுக்கு?ஆறறிவு படைத்த மனிதர்களாக பிறந்தவர்கள் வசதியாக இருந்தாலும், வறுமையில் உழன்றாலும் அவர்களுக்கு தன்னை பெற்ற தாய் மீதும், வாழும்
நாட்டின் மீதும் பற்றும் பாசமும் இருக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல;
அத்தியாவசியமும் கூட.தேசத்தின் மீதுள்ள பற்றை, தேசியக் கொடியை வணங்கி மரியாதை செலுத்துவதன் வாயிலாகவும், தேசிய கீதத்தை
பிழையின்றி பாடுவதன் வாயிலாகவும் வெளிப்படுத்தலாம்.அப்படி மதித்து, மரியாதை செலுத்தி வணங்க வேண்டிய தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுப்பவர்களை, என்னவென்று அழைப்பது, எதில் சேர்ப்பது!
அதிலும் அவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் என்பது வருத்தத்தை வரவழைப்பதாக உள்ளது.
உலகில் உள்ள எந்த நாட்டு அரசியல்வாதியும், அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அந்த நாட்டு தேசிய கீதத்தை அடிபிறழாமல் பாடுபவரா
கவும், தேசியக் கொடிக்கு உரிய மரியாதை கொடுப்பவராகவும் தான் இருப்பர்.இந்த நாட்டில் மட்டும் தான், குறிப்பாக தமிழகத்தில், தேசிய கீதத்தை பாடத் தெரியாத பேர்வழிகளையும்,
நாட்டுப் பற்று என்றால், கிலோ என்ன விலை என்று கேட்கும் அரசியல்வாதிகளையும், ஆட்சி பீடத்தில் அமர வைத்து அழகு பார்த்து கொண்டிருக்கிறோம்.தமிழக சட்டசபையில் உறுப்பினர்
களாக அமர்ந்திருக்கும் 234 பேர்களில், தேசிய கீதத்தை பிழையின்றி பாடுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
சுதந்திரமடைந்த இந்த, 78 ஆண்டுகளில், தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுக்கும் முயற்சி, இந்த ஆண்டு தான் அரங்கேறி உள்ளது.
ஒரு அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கே முட்டுக்கட்டை போட்டு, பிரச்னை ஏற்படுத்தும் இவர்கள் கைகளில், நாட்டின் நிர்வாகம் இருந்தால், அந்த
நிர்வாகம் என்ன கதியாகும்? சிறந்த உத்தரவை வழங்கி நாட்டுக்கும், தேசியக் கொடிக்கும் பெருமையும், புகழும் சேர்த்து இருக்கிறார், உயர்
நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள்.நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவுக்கு தலை வணங்குகிறோம். வாழ்க நீ எம்மான்!
தாயை தவிக்கவிட்டு, கோதானம் செய்வதா?
முனைவர் மீனாட்சி பட்டாபி ராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: 'முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே துட்டு படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தைப் போல மழை கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு இங்கே' என,
டி.ஆர்.மஹாலிங்கம், ஆட வந்த தெய்வம் திரைப்
படத்தில் பாடுவார். அந்த வரிகளை நினைவூட்டுகிறது, 12ம் தேதி வெளியாகிய செய்தி ஒன்று.தேனியிலிருந்து சின்னமனுார் செல்லும் அரசு பேருந்தின் கூரை வழியே, மழை நீர் கொட்டி, பயணி
யருக்கு குற்றால அனுபவம் கொடுத்துள்ளது! நாள் தவறாமல் நாளிதழில் வெளியாகும் கொலை, கொள்ளை செய்தி
களுக்குப் போட்டியாக வருவது, இந்த அரசு பஸ் பற்றிய பிரதாபம் தான்.
ஒருநாள், சக்கரம் கழண்டு ஓடுகிறது; ஒருநாள், படி தனியாக கழண்டு வீதியில் தட்டி நிற்க, அதைப் பிடிக்க நடத்துனர் ஓடுகிறார்; ஒருநாள் பஸ்சின் தளத்தில்
உள்ள ஓட்டையில் சிறு குழந்தைகள் விழும் அவலம்; 'லொடலொட'வென்று ஆடும் படியில் கால் வைத்து ஏறும் போதே, நொடியில் மரணம் என்பது ஏனோ நினைவுக்கு வருகிறது.
இருக்கைகள் குறித்து கேட்கவே வேண்டாம்... நமக்கு ஆயுசு கெட்டியாகஇருந்தால் தான் பஸ்ஸின் ப்ரேக் பிடிக்கும்!ஒரு திரைப்படத்தில், வாகனத்தில் பயணிக்கும் போது நாகேஷின்
நண்பர் அவரைப் பார்த்து, 'ப்ரேக்கைப் பிடி, ப்ரேக்கைப் பிடி' என்பார்; அதற்கு நாகேஷ், 'இருந்தா பிடிக்க மாட்டேனா?' என்பார். அதே கதி தான் நம் அரசு
பேருந்துகளுக்கும்.ஓட்டுனர் பாவம் உயிரைக் கையில் பிடித்தபடி தான் அன்றாடம்பஸ்சை ஓட்ட வேண்டியுள்ளது.'செத்தால் பத்து' என்பது மட்டும் அரசின் கடமை இல்லை; நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி
படுத்துவதும் அரசின் கடமை தான்.டிக்கெட் இல்லாமல் பஸ்சில் பயணம் செய்யலாம்; ஆனால், அது நமக்கு, 'டிக்கெட் கொடுக்காமல்' இருக்க வேண்டுமே என்ற கவலை மேலோங்குகிறது.
கருணாநிதிக்கு விழா எடுங்கள்; உதயநிதிக்கு பட்டம் கட்டுங்கள்; கார் ரேஸ் நடத்துங்கள்...
சந்தோஷம்; அதே நேரம், உங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் நலனிலும்சற்று அக்கறைகாட்டுங்கள்.பெற்ற தாயை தவிக்க விட்டு, கும்பகோணத்தில் கோதானம் செய்வதால் பயனில்லை!
உக்ரைன் போலதங்கப்பதக்கம்வாங்க
முடியலியே?மரகதம் சிம்மன், கலிபோர்னியாவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்: உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு நம்முடையது எனச் சொல்லிக் கொள்கிறோம்; ஆனால், ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கம் கூட வாங்க முடியவில்லை.
சிறிய நாடுகளான நியூசிலாந்து, உக்ரைன் ஆகியவை தங்கப்பதக்கம் வென்றிருக்கின்றன. நம்மால் ஏன்முடியவில்லை?கிரிக்கெட் விளையாட்டுக்கு காட்டப்படும் ஆர்வம், மற்ற விளையாட்டுகளுக்கு காட்டப்
படவில்லை என்பது தான் உண்மை.பள்ளிகளில் விளையாட்டுக்கு முக்கியத்துவம்கொடுத்தால், மாணவர்
களின் கவனமும், மொபைல் போன்களிலிருந்து திரும்பும்; ஆரோக்கியமும் வலுப்படும்.
உக்ரைன் தற்போது ரஷ்யாவுடன் சண்டையில்மக்களை தினமும் இழந்து கொண்டிருந்தாலும், மறுபக்கம், விளையாட்டில் கவனம் செலுத்துவதால், 3 தங்கப்பதக்கங்களை வாங்க முடிந்திருக்கிறது.
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதற்கு, உக்ரைன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.அரசியலிலும், கிரிக்கெட்டிலும் ஆர்வம் கொண்டு அலைந்து திரியும் நாம், வேறு பல நல்ல விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியம் சீராகும். நடக்குமா?

