PUBLISHED ON : செப் 08, 2011 12:00 AM

வழக்கமான பழிவாங்கும் நடவடிக்கை! எம்.என்.சீனிவாசன், வேலூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்களான, கிரண் பேடி மற்றும் ஓம் புரி ஆகியோருக்கு, மத்திய அரசு, உரிமை மீறல் நோட்டீசும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வருமான வரித்துறை நோட்டீசும் அனுப்பியுள்ளது, அப்பட்ட மான பழிவாங்கும் நடவடிக்கை என்பதை, பாமர மக்களும் நன்கு அறிவர்.இத்தகைய நடவடிக்கைகள், ஹசாரேவின் தூய போராட்டத்தைத் துரிதப் படுத்தி, அதற்கு வலுவூட்டி, காங்கிரசை வெகுவாக பலவீனப்படுத்தும் என்பதை, அக்கட்சி உணர வேண்டும்.இது பற்றி எதிர்க்கட்சிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது, வருந்தத்தக்கது.
கோடீஸ்வரர்களாக விளங்கும் பல அரசியல்வாதிகள், லோக்பால் சட்டம் செயல் வடிவம் பெறுவதை விரும்பவில்லை என்பதையே, இது தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.அடுத்த தலைமுறைக்காவது, ஊழலற்ற இந்திய சமுதாயத்தைக் காணும் வாய்ப்பு கிட்டுமா?