sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

பைத்தியம் முற்றினால் 'பாரத் ஜோடோ!'

/

பைத்தியம் முற்றினால் 'பாரத் ஜோடோ!'

பைத்தியம் முற்றினால் 'பாரத் ஜோடோ!'

பைத்தியம் முற்றினால் 'பாரத் ஜோடோ!'

10


PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

10


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எல்.சுரேஷ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் கனவு, பகல் கனவானதிலிருந்து, ராகுலின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும், ராகுலுக்கு சித்தப்பிரமை பிடித்திருப்பதை ஊர்ஜிதப்படுத்துவது போலவே அமைந்து வருகின்றன. பார்லிமென்டில் அறிவுப்பூர்வமாக பேசுவதும் இல்லை. ஆளுங்கட்சியை நோக்கி, நியாயமான வினாவை எழுப்புவதும் இல்லை.

அவையை முடக்கி, ஆனந்தம் காண்பதில் உள்ள ஆர்வம், அவையை நடத்த விடுவதில், இல்லை.

சில நாட்களுக்கு முன், 'மிஸ் இந்தியா' அழகி போட்டியில் தலித்கள், பழங்குடியினர் மற்றும் இதர தாழ்த்தப்பட்ட வகுப்பினர் யாரும் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை என்று கலாய்த்தார்.

அழகி போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுடைய தலித்கள், பழங்குடியினர் மற்றும் இதர தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களை கலந்து கொள்ள இயலாமல் யாராவது தடுத்தனரா என்ன; இல்லையே!

அழகிப் போட்டி நடத்துபவர்கள், தலித்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கையைப் பிடித்து அழைத்து வந்து பங்கேற்க வைக்க வேண்டுமென ராகுல் நினைக்கிறாரா?

ராகுல் சொல்வது போல், ஒரு பேச்சுக்கு அப்படி செய்வதாக இருந்தாலும், அப்போது கூட, தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து கையைப் பிடித்து இழுத்தனர் என்றும் ராகுல் குற்றம்சாட்டுவார்.

அடுத்தது ராகுல், விளையாட்டு போட்டிகள் மீது தான் தாக்குதலை செலுத்தினார்.

அந்த தாக்குதலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, 'பசியாற உணவு அருந்தியவர்களுக்கு தற்காப்பு கலை மற்றும் பிற விளையாட்டுகள் முக்கியம் தான்; மறுக்கவில்லை. ஆனால், நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்துடன் மக்கள் போராடும் போது, ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை அறிவிப்பது, அவர்களை கேலி செய்யும் வகையில் உள்ளது' என்று தக்க பதிலடி கொடுத்து உள்ளார்.

'கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வரும்' என்பது ஒரு பழைய சொலவடை. பைத்தியம் முற்றினால் பாரத் ஜோடோ யாத்திரை நடத்த முன் வரும் என்பது புதிய சொலவடை.



பொறுப்பாக செயல்பட வேண்டியவர்களின் பிதற்றல்கள்!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த தேர்தல் சமயத்தில் இருந்தே, எதிர்க்கட்சி தலைவர்கள், 'அரசியல் சாசனம், இட ஒதுக்கீடு போன்றவை ஆபத்தில் உள்ளன' என்கிற தவறான, பொய் பிரசாரம் செய்தனர்.

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், இட ஒதுக்கீட்டில் அதற்கேற்ப மாறுதல்கள் கொண்டு வருவோம், மக்கள் தொகையில் எத்தனை சதவீதமோ அத்தனை உரிமை, அரசு பணி, முக்கிய உயர் பதவிகளில் ஓ.பி.சி., வகுப்பினர் சொற்ப அளவிலேயே உள்ளனர்' என்றெல்லாம் கூறினர்.

ஆனால் தாங்கள் ஆட்சிபுரிந்த காலங்களில், இவற்றை அமல்படுத்த ஏன் தவறினர் என்பது குறித்து பேச மறுக்கின்றனர்.

இவர்கள் ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது; ஆனால் விபரங்களை வெளியிடவோ, மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கவோ முன்வரவில்லை, ஏன்?

தமிழக முதல்வரோ இந்த பணியை மாநில அரசே செய்வதற்கு பதிலாக, மத்திய அரசே செய்ய வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

தி.மு.க.,வின் கூட்டணி யில் உள்ள வி.சி.க., தலை வர், 'நாட்டில், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முதல்வர் பதவியில் உட்கார முடியாத நிலை உள்ளது' என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

இவை போதாதென்று, பிதற்றலின் உச்சகட்டமாக, 'மிஸ் இந்தியா போட்டியில் பட்டியலினப் பெண்கள் இல்லை' எனக் கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்.

'நீங்கள் ஆட்சி செய்த காலங்களில் இதையெல்லாம் ஏன் செய்யவில்லை?' என்று கேட்டால், இவர்களால் பதில் கூற இயலாது.

சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகள், 'வருகிற தேர்தலில் காஷ்மீரில் வெற்றி பெற்றால், அரசியல் சாசனப் பிரிவு, 370 நீக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலைக்கு கொண்டு வருவோம்' என்று கூறியுள்ளது, தேசத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமகனின் உணர்வையும் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இவர்களின் பல்லாண்டு கால ஆட்சியில், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதம், ஹிந்துக்கள் படுகொலைகள், தினமும் கல்லெறி சம்பவங்கள், வன்முறைகள், தீவிரவாதம், தேசியக் கொடியை ஏற்றமுடியாத நிலை நிலவி வந்தது, ராகுல் உட்பட, அனைவருக்கும் தெரியும்.

காஷ்மீரில் இவர்கள் வெற்றி பெற்றால், இந்த நிலையைத் தான் மீண்டும் கொண்டு வருவோம் என்று கூறுகின்றனரா?

சமீபத்தில் காங்கிரசின் முக்கிய புள்ளிகளில் ஒருவர், 'வங்கதேசத்தில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய வன்முறைகள், போராட்டங்கள் இந்தியாவிலும் நடக்கலாம்' என்று கூறியுள்ளார்.

இது, கடந்த தேர்தலில் சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஹிண்டன்பர்க் மற்றும் பல தேச விரோத, தீய சக்திகளின் ஆதரவோடும் ஆட்சியைப் பிடிக்க இயலாதவர்கள், மக்கள் ஆதரவைப் பெற இயலாதவர்கள், இப்படி ஏதாவது வன்முறைகள், போராட்டங்கள் வாயிலாக ஆட்சியைப் பிடித்து விட மாட்டோமா என்று தவிப்பதன் வெளிப்பாடே!

'லேடரல் என்ட்ரி' வாயிலாக, உயர் பதவிகளுக்கு தனியார் நிறுவனங்களிலிருந்து, திறமையான, அனுபவம் மிக்கவர்களை நியமனம் செய்யக்கூடாது என்று எதிர்க்கட்சிகள், குறிப்பாக ராகுல் கூறிவந்தார்.

அதை ஏற்று அந்த யோசனையை அமல்படுத்தினால், அரசைப் பாராட்டுவதற்கு பதிலாக, 'யு டர்ன் அடித்த அரசு' என்று அரசியல் செய்கின்றனர், ஏன்?

நாட்டின், மக்களின் நலனுக்கும், வளர்ச்சிக் கும், முன்னேற்றத்திற்கும், ஆளும்கட்சிக்கு உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டிய எதிர்க்கட்சிகள், அதன் தலைவர்கள், தேச விரோத, தீய சக்திகளுடன் கை கோர்த்து, எதைச் செய்தாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்கிற வெறியில், ஜாதி, மத, பொய்.

தவறான பிரசாரங்கள், இன, மொழி, பிரிவினைவாதங்களைத் துாண்டி விடுதல், இலவசங்கள் போன்ற அரசியல் செய்து வருவது தேச பக்தியுள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் வேதனையளிப்பது மட்டுமின்றி, தேசத்தின் துர்பாக்யமே.








      Dinamalar
      Follow us