PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM

எஸ்.முக்கொம்பன், தேனியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேனியில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய, பா.ஜ.,வைச் சேர்ந்த அக்கட்சியின் விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர்அமர்பிரசாத் ரெட்டி, 'அ.தி.மு.க., தலைவராகும் தகுதி முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே உள்ளது' என, கொளுத்தி போட்டு இருக்கிறார். மேலும், 'துரோகத்தின்மறு பெயர் பழனிசாமி. அவர் யாருக்கும் உண்மையாக இருந்தது இல்லை' என்று வேறு போனசாக குறிப்பிட்டு இருக்கிறார்.
மத்திய பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேச வந்தால், மத்திய பட்ஜெட் விபரங்கள் குறித்து மட்டுமே விளக்க வேண்டும்.
பழனிசாமி துரோகியா அல்லது நம்பத் தகுந்தவரா என்றும், அ.தி.மு.க.,வுக்கு தலைவராகும் தகுதி யாருக்கு இருக்கிறது என்றும் யாராவது இவரிடம் கேட்டனரா? இல்லையே!
எதற்காக முந்திரிக்கொட்டை மாதிரி அடுத்த கட்சி விவகாரங்களில் கருத்து சொல்லி மூக்கை நுழைத்து, மூக்குடைபட வேண்டும்?
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கூட, ஆட்டுவித்தால், கொஞ்சம் வேகமாகவே ஆடும்.
ஆனால், பன்னீர்செல்வம் எப்போதும்அடிமேல் அடி வைத்து, அங்குலம் அங்குலமாக நடந்து செல்வார்.
மறைந்த ஜெயலலிதாவுக்கு,நீதிமன்றத்தின் வாயிலாக பிரச்னை வந்த போது, சுயமாக சிந்திக்கும் திறனோ, ஆற்றலோ, அறிவோ அற்ற, தான் சொன்ன பேச்சை கேட்டு கொண்டு நில் என்றால் நிற்கவும், உட்கார் என்றால் உட்காரவும் ஒரு பொம்மை தேவைப்பட்டது. அதற்காக சாவி கொடுத்து இயக்கி வைக்கப்பட்டவர் தான் பன்னீர் செல்வம்.
அவரைப் போய், தலைவர் பதவிக்கு தகுதியானவர் என்று எப்படி சொல்ல முடியும்?
சொந்தமாக நான்கு அல்லது ஐந்து வரிகள்கொண்ட ஒரு அறிக்கையை கூட, தானாக எழுதத் தெரியாமல், அதை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவதற்கு கூட, மருது அழகுராஜ் என்ற ஒரு பினாமியை வைத்திருப்பவரை, மாபெரும் அரசியல் கட்சிக்கு தலைவராகும் தகுதி உள்ளவர் என்று எப்படி இந்த அமர்பிரசாத் ரெட்டியால், சிரிக்காமலும், சிந்திக்காமலும், வாய்கூசாமலும் சொல்ல முடிகிறது?
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி, அனாவசியமாக கருத்து சொல்லி, வேண்டாத வேலை பார்க்காதீர்கள்; அது, சில சமயங்களில் உங்கள் கட்சி பொறுப்புக்கே கூட உலை வைத்து விடும். ஜாக்கிரதை!
இறை வனை மட்டும் கும்பிடுங்கள்!
கே.குமரேஷய்யர்,
கும்பகோணத்தில் இருந்து எழுதுகிறார்: சமீபத்தில் வந்த ஆடி அமாவாசைக்கு
ராமேஸ்வரத்திற்கு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்யலாம் என
சென்றிருந்தேன். ஏன் சென்றோம் என்ற மோசமான நிலைமை எனக்கு ஏற்பட்டது.
பஸ்சை
விட்டு இறங்கிய உடனே, ஆட்டோக்காரர்களால் எனக்கு தலைவலி ஏற்பட்டு விட்டது.
'சார் ஏதேனும் பூஜைகள் செய்யணுமா, பரிகாரங்கள் செய்யணுமா' என்று நச்சரித்து
விட்டனர்.
நானும், 'முன்னோருக்கு திதி செய்ய வேண்டும்' என்று கூறியதும், ஒரு அய்யரிடம் கொண்டு போய் விட்டனர்.
அவர்
கேட்ட தொகை 10,000 - 15,000 வரை. எனக்கு தலை சுற்றியது. லாட்ஜ் எதுவும்
எடுக்கவில்லை. பின் ஒருவழியாககடற்கரை சென்றேன். அங்கு கூட்டம் சொல்லி மாள
முடியாது. அங்கு புரோகிதர்கள் எள்ளையும், தண்ணீரையும் கையில் கொடுத்து
2,000 - 3,000 ரூபாய் வரை பிடுங்கிக் கொண்டு இருந்தனர்.
கடலில்
சாக்கடை நாற்றம் தாங்க முடியவில்லை. எப்படியோ, 22 தீர்த்தங்களில் குளித்து
விட்டு, சுவாமிக்கு பாலாபிஷேகம், ருத்ராபிஷேகம் செய்யலாம் என விசாரித்தேன்.
அங்கு
உள்ள நல்ல மனிதர் ஒருவர், 'இதெல்லாம் கோவில் சார்பாக எதுவும் செய்வதில்லை.
ருத்ராபிஷேகம் 3,000 ரூபாய் என ஒளிபரப்பு தான் செய்வர். தனி வடமாநில
அய்யர்கள் தான் செய்வர். அதுவும் நடராஜர் மண்டபத்தில் உள்ளே செய்வர்.
இதற்கு 7,000 ரூபாய் வரை வாங்கி விடுவர்.
'இதுபோல் அபிஷேக பூஜை
தனியார் வசம் தான் உள்ளது. பணத்தை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். நிர்வாகம்
எவ்வித சம்பந்தமும் இல்லை. எவ்விதநடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.
ஏமாந்து விடாதீர்கள்' என்று எச்சரித்தார்.
தயவு செய்து ராமேஸ்வரம்
செல்வோர் பூஜை, பரிகாரம் என்று போலி புரோகிதர்களிடம் ஏமாந்து, பணத்தையும்,
மன அமைதியையும் தொலைத்து விட்டு வராதீர்கள்.
'சிவசிவா' என, இறைவனை மட்டும் கும்பிட்டு வாருங்கள்.
கரு ணாநிதி தொண்டர்களின் ஏக்கம்!
எம்.கல்யாணசுந்தரம்,
நடூர், மேட்டுப்பாளையம்,கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை
கொண்டாடும் வகையில்,அவரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நினைவு நாணயம்
வெளியிட மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.
'அந்த
நாணயம் மக்களின் புழக்கத்திற்கு வராது; சேமிப்பிற்கு வாங்கி கொள்ளலாம்;
நினைவை போற்றும் வகையில் கட்சியினர் வாங்கி வைத்துக் கொள்ளலாம். அந்த 100
ரூபாய் நாணயத்தை, அறிவாலயத்தில் 10,000 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்'
என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இவ்வளவு பெரிய தொகை
கொடுத்து அந்த நாணயத்தை யார் வாங்குவர் தெரியுமா... ஆளுங்கட்சியின்
அமைச்சர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், தி.மு.க.,வின் பெரிய தலைகள்,
பெரிய நிறுவனங்கள் என்று பட்டியல் நீண்டபடியே இருக்கும். மேலும், இருப்பை
தக்கவைத்துக் கொள்ள, கூட்டணி கட்சியினர் கூட வாங்கலாம்.
ஆனால்,
கருணாநிதி மீது பற்று கொண்ட, 'உடன்பிறப்பே...' என்ற அவரின் கரகரப்பான குரலை
கேட்டு, கைதட்டி ஆர்ப்பரித்த தி.மு.க., தொண்டனால், அந்த நாணயத்தை வாங்க
முடியுமா? 10,000 ரூபாய் என்பது, கட்சிக்கு உண்மையாக உழைக்கும் தொண்டனின்
ஒரு மாத குடும்ப செலவு.
கட்சிக்கு ஓட்டு வாங்க உழைத்தவர்கள், 100
மற்றும்200 ரூபாய் வாங்கி, கட்சி கூப்பிடும் போதெல் லாமல் சளைக்காமல்
உழைத்த தொண்டர்கள்அனைவரும் ஓரமாக நின்று, ஏக்கமாய் அந்த நாணயத்தை
பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிவாலயம் அறியுமா?
அடிக்கடி
சமூக நீதி பேசும் அறிவாலய குடும்பத்தினர், கடைக்கோடி தொண்டனுக்கும்
கிடைக்கும் வகையில், அந்த நாணயத்தின் மதிப்பிலேயே அதை விற்பனைசெய்ய
வேண்டும்; அதை விடுத்து வியாபாரம்செய்ய நினைப்பதுசரியல்ல!

