sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

சட்டங்களால் எந்த பயனும் இல்லை!

/

சட்டங்களால் எந்த பயனும் இல்லை!

சட்டங்களால் எந்த பயனும் இல்லை!

சட்டங்களால் எந்த பயனும் இல்லை!

3


PUBLISHED ON : செப் 06, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 06, 2024 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ --- மெயில்' கடிதம்: 'பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்காத சட்டங்களுக்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மட்டுமே இருக்கிறதா என்ன? கம்யூ.,க்கள் ஆட்சி நடத்தும் கேரளாவிலும்,திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழகத்திலும் இருக்கத்தானே செய்கிறது.

பா.ஜ., முதல்வர்களுக்கு அட்வைஸ் செய்யும் முதல்வர் மம்தா, கோல்கட்டாவில்பயிற்சி பெண் மருத்துவர் பாலியல்பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பு ஏற்று, தன் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை?

மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்வதை விட்டு விட்டு, மம்தாவே முன்மாதிரியாக இருக்க வேண்டியது தானே. பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு துாக்கு தண்டனை என்று சட்டம் இயற்றினால் மட்டும் இந்தஅநீதிகள் நின்று விடுமா என்ன?

ஏற்கனவே அமலில் இருக்கும், 'போக்சோ' சட்டத்தால், சிறுமியருக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகள் தடுக்கப்பட்டு விட்டதா என்ன? கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்று சட்டம் அமலில் இருந்தும், நாட்டில் கொலைகள் இன்னும் நடந்து கொண்டு தானே இருக்கின்றன?

குற்றங்களில் ஈடுபடுவோர், தான் செய்வது தவறு என்பதை உணர்ந்து, தானாக மனம் திருந்த வேண்டும். அதுவரை, எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் எந்த பயனும் இல்லை.



தேசிய கட்சிகளுக்கு பொறுப்பு வேண்டும்!


த.யாபேத்தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: ஜம்மு -- காஷ்மீருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. செப்., 18ல் துவங்கி மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

உலகமே வியந்து பார்க்கும் வகையில் இங்கு தேர்தல் நடைபெற உள்ளது. மிகவும் வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்த இந்த மாநிலம், தற்போது தான் சற்று அமைதியாக இருக்கிறது.

மக்களும் ஜனநாயகபாதைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இதை, சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தல் உணர்த்தியது. இதற்கெல்லாம் அரசியல் அமைப்பு பிரிவு 370 நீக்கம்தான் மிகப்பெரிய காரணமாகும். இது ஒரு தற்காலிகஏற்பாடு தான்.

ஆனால் மிக நீண்ட காலமாக தேசத்தை ஆண்டு கொண்டிருந்த காங்., அரசுகள் அதை நீக்க முன்வரவில்லை. சிறப்பு அந்தஸ்தில் இருந்ததால் அந்த மாநிலம் அமைதியாகவும் இல்லை.

எனவே, அமைதியை உருவாக்க பா.ஜ., அரசு 370 பிரிவை சட்டப்படி நீக்கியது. இப்போது அந்த மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. ஆயினும், அமைதியை சீர்குலைக்கும் அராஜக செயல்கள் முற்றிலுமாக நீங்கிவிடவில்லை. எனவே அமைதி குலையாமல் பாதுகாக்க வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் கடமை.

இப்போது அங்கு தேசிய மாநாட்டு கட்சியும்,காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தேசிய மாநாட்டு கட்சி 370ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்றுதேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது. அந்த தேர்தல் வாக்குறுதி, பல்வேறு பிரிவினை கூறுகளை உள்ளடக்கி உள்ளது.

அங்கு, 370ஐ நீக்கிய பின்தான் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

பட்ஜெட் உருவாக்கத்தின்போது அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் பட்டியலினத்தவர்கள் இல்லை என்றும், உலக அழகிப் போட்டியில் பட்டியலினத்தவர்கள் இல்லை என்றும் அங்கலாய்க்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல், இட ஒதுக்கீடே வழங்காமல்இருந்த சிறப்பு அந்தஸ்துவேண்டும் என்று கூறுகிறாரா?

அப்படியெனில் நாடு முழுதும் பிற்படுத்தப்பட்டவர், பழங்குடியினர்நலன்கள் குறித்து, அவர் பேசுவதெல்லாம் இரட்டை வேடம் தானா?

இந்தக் கூட்டணி ஒருவேளை வெற்றி பெறுமானால், '370ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்பதற்காக தான் மக்கள், எங்களுக்கு ஓட்டளித்துள்ளனர்' என்று கூறக்கூடிய நிலை நிச்சயம் உருவாகும்.

மேலும் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ள பிரிவினை கோஷங்களும் வலுப்பெறும். இது மீண்டும் அந்த மாநிலத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கலாம். எனவே, தேசிய கட்சிகள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டு இத்தகைய சூழல் வராமல் தடுத்து நிறுத்த வேண்டும்.



தீதிக் கு நிஜமான அக்கறை இருக்கா?


சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை, நெல்லைமாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த பாலியல்குற்றம் சம்பந்தமாக மம்தாவின் ஆவேச பேச்சுகளும், செயல்பாடுகளும் சிரிப்பைத் தான் வரவழைக்கிறது.

ஒரு பழைய பித்தளை வியாபாரியிடம், ஒரு குடும்பத் தலைவி தன் வீட்டில் இருந்த பழைய பாத்திரங்களை விலைக்கு போட்டுக் கொண்டிருந்தார்.பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்த வியாபாரிபாத்திரங்களை எல்லாம் ஒரு சாக்குப் பையில் சுருட்டி எடுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார்.

பதறிப் போன பெண்மணியும், 'அவரைப் பிடிங்க, அவரைப் பிடிங்க' என்று கூவிக் கொண்டே பின்னால் ஓடினார்.பித்தளை வியாபாரியோ,'அந்த விலைக்கு கட்டாதும்மா' என்று பதில் சொல்லிக்கொண்டே பாத்திரங்களோடு ஓடியே போய் விட்டார்.

பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும், 'ஏதோ வியாபார பிரச்னை' என்றே நினைத்துக் கொள்ளும்படியான தோற்றத்தை உண்டு பண்ணி, தப்பி விட்டாராம்.

அந்த வகையில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை மாநிலம் சம்பந்தப்பட்டது. பாலியல் தவறு செய்தோர் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில்இருக்கும் தீதியோ, பழைய பித்தளை வியாபாரியை போல, 'பாலியல்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்' என்று ஒரு பக்கம் பேரவையில் தீர்மானம் போட்டபடியும்...

இன்னொரு பக்கம், 'குஜராத் குற்றங்களுக்காக மோடி, பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்' என்றும், ஆவேச அறிக்கை விடுகிறார்.

ஆனால், மாநில அரசுக்குஉதவ வந்த சி.எஸ்.எப்., போன்ற மத்திய அரசின் வீரர்களுக்கு தங்குவதற்கு கூட இடம் கொடுக்க மறுக்கிறார். ஏதோ, மத்தியஅரசின் அலட்சியம் தான் இந்த பாலியல் குற்றம் நடக்க காரணம் என்பது போன்ற மாயத் தோற்றத்தை உண்டு பண்ண முயற்சிக்கிறார்.

உண்மை குற்றவாளிகள் மீது நிஜமாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளியேனும் இருந்தால், மத்திய அரசோடு மம்தா ஒத்துழைக்க வேண்டிய நேரமல்லவா இது? இந்த விஷயத்தில், அந்த பழைய வியாபாரிக்கும், மம்தாவுக்கும் என்ன வித்தியாசம்?

மேற்கு வங்க தீதி தான்இப்படியென்றால்,இங்கே தமிழகத்தில் உள்ள, 'இண்டியா'கூட்டணி தலைவர்கள்,இதுகுறித்து வாயே திறக்காமல், மவுன விரதம் அனுசரிப்பது அதை விட பெரிய அநீதி!








      Dinamalar
      Follow us