PUBLISHED ON : ஏப் 23, 2024 12:00 AM

என்.நெல்சன், முட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுபான கொள்கையில் நடந்த ஊழல் தொடர்பாக, அமலாக்கத் துறையால், பல்வேறு போராட்டங்களுக்கு பின், நீதிமன்ற உத்தரவுப்படி, டில்லி திஹார் சிறையில், அறை எண் -2ல் அடைக்கப்பட்டுள்ள, அரிச்சந்திரனுக்கு தம்பியும், உத்தமபுத்திரனும், சத்தியசீலனுமான அரவிந்த் கெஜ்ரிவால், 'என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால். நான் பயங்கரவாதி அல்ல' என்ற செய்தியை அனுப்பி உள்ளதாக, ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
ஆம்... அரவிந்த் கெஜ்ரிவால் சொல்வது, உண்மையிலும் உண்மை; நுாற்றுக்கு நுாறு சத்தியமான வார்த்தை.
அரவிந்த் கெஜ்ரிவால், பயங்கரவாதியோ, தீவிரவாதியோ அல்ல; தேசத் துரோகி!
இந்திய குடியுரிமை பெற்ற இந்திய குடிமகனாகவும், ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் இருந்து கொண்டு, புதுடில்லி சிறையில் உள்ள காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை விடுவிப்பதற்காக, 2014 - 22 வரை, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள குழுக்களிடம் இருந்து, 134 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக, காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான் தெரிவித்துள்ள தகவல் எப்போது கிடைத்ததோ, அப்போது முதல் கெஜ்ரிவால், தேசத் துரோகி ஆகி விட்டார்.
இது போன்ற சம்பவம், ஒரு அரபு நாட்டில் நடந்து இருந்தால், கதையே வேறு.
நம் நாட்டிலுள்ள அரசியல் சட்டங்களும், நீதிமன்றங்களும், சாமானிய மக்களை பாதுகாக்கிறதோ இல்லையோ, அரசியல்வாதிகளை சிறந்த முறையில் காப்பாற்றி, பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால், இந்த தேசத் துரோகிக்கு ஆதரவாக ஒரு கும்பல், 'இண்டியா' கூட்டணி என்ற பெயரில் - போராட்டம் நடத்தியதை அனுமதித்து இருக்குமா?
மனித உரிமை அமைப்புகள் வேறு, இதற்கெல்லாம் துணை.
அந்த தேசத் துரோகிக்கு, சிறையில், 'ஏசி' வசதி இல்லை என்ற அவரின் புலம்பலை ஒலிபரப்பி, ஆலவட்டம் வீசிக் கொண்டிருக்கின்றன.உருப்படுமா நம் நாடு?
அன்று பராசக்தி... இன்று பரமநோஞ்சான்!
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது. அதில்
இதுவும் ஒன்று... ஆனால் புதுமையானது.
குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்;
ஜனநாயகக் கடமையான ஓட்டுப் போடுவதற்கு லஞ்சம் பெறுகின்றனர் என்று நீங்கள்
நினைக்கலாம். அவர்கள் இதை மறுப்பர். இல்லை இல்லை... நிச்சயமாக இல்லை.
'ஓட்டுப்
போட காசு வாங்கினோம்... எங்கள் வறுமையை ஒழிக்க எண்ணி; தேர்தலிலே வெற்றி
பெற அரசியல்வாதிகள் கண்டு பிடித்த புதிய வழி அது என்று தெரியாமல்'
என்கின்றனர்.
திருமங்கலம்! ஆம், அங்கு இடைத் தேர்தல் வந்தபோது,
எப்பாடு பட்டாவது ஜெயிக்க வேண்டும் என்று, ஆட்சியாளர்கள் பணத்தை வெள்ளமாக
ஓடவிட்டு ஜெயித்துக் காட்டினர். அப்பாவி குடிமகன், அதன் உண்மைத் தன்மை
அறியாது பணம் பெற்றதால், மகிழ்ச்சி அடைந்தான்.
பின்னாளில் இந்த
நடைமுறை நாட்டுக்கும், நாட்டுநலனுக்கும் வேட்டு வைக்கப்போகிறது என்பதை
அறியாமல், கஞ்சி குடிப்பதற்கும் இல்லாமல், அதன் காரணம் யாதென்றும்
புரியாமல் அல்லாடும், கிராமப்புற ஏழைக்கு, இந்த பணம் சொர்க்கமாகத்
தெரிந்தது.
முதலில் தயங்கியவர்கள், பிறகு இது சரி என்ற
மனநிலைக்குத் தள்ளப்பட்டனர். அடுத்தடுத்து வந்த தேர்தல்களிலும், பணம்
எதிர்பார்க்கத் தொடங்கினர். அரசியல்வாதிகளும், தேர்தலில் ஜெயித்து, வண்டி
வண்டியாய் கொள்ளை அடிக்க, இது, நல்ல உபாயமாகத் தெரிந்தது. அன்று
பிடித்தது தான் இந்த ஏழரை; இன்னும் தொடர்கிறது!
இப்படி சட்டத்திற்கு
புறம்பாக பணம் கொடுப்பதையோ, வாங்குவதையோ தேர்தல் ஆணையத்தால் தடுக்க
முடியவில்லை என்று தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் தமிழக தேர்தல் ஆணையர்.
இது சற்று வேடிக்கையாய் இல்லை?
ஓட்டுப்போட லஞ்சமாக பணம்
பெற்றவர்களை குற்றவாளி என்று கூறும் உங்கள் சட்டம், லஞ்சம் கொடுக்கும்
அதிகாரிகளை கண்டிக்க முடியுமா அல்லது தண்டிக்க முடியுமா?
ஓட்டுக்கு
பணம் வாங்குவது குற்றம் என்று விளம்பரம் செய்வோர், ஓட்டுக்கு பணம்
கொடுப்பது குற்றம் என்று ஏன் சொல்வதில்லை... ஏனென்றால், சட்டங்கள் எல்லாம்,
சாமானியனுக்கும், சாதாரண குடிமகன்களுக்கும் தான்!
ஓட்டுக்கு பணம்
வாங்குகின்றனர் என்றால், அதற்கு காரணம் தெரியுமா? நாடெங்கும் சாராயக் கடை
விரித்து குடிமகன்களை பெருக விட்ட அரசு தான் காரணம்.
சாராயம் விற்ற
காசில் கல்லா கட்டி, சமயம் பார்த்து மணல் கொள்ளை அது, இது என்று பல
வகையில் நாட்டைச் சுரண்டி, மக்களை பஞ்சப் பராரிகளாய் கையேந்தும்
பிச்சைக்காரர்களாய் வைத்துள்ள அரசு தான் காரணம்.
இந்த செயற்கையான
பஞ்சம் மூலம் குளிர்காயும் ஆட்சியாளர்கள், தேர்தல் நேரத்தில், நாய்க்கு
எலும்புத் துண்டு மாதிரி மக்களுக்கு பணமும், பரிசுப்பொருளும் தந்து, ஓட்டு
அறுவடை செய்வது, எழுதப்படாத விதியாகிவிட்டது.
மாறி மாறி ஆட்சி
செய்த திராவிடக் கட்சிகள், தொலைக்காட்சிப் பெட்டி, மிக்சி, கிரைண்டர் என்று
கொடுத்து தாய்குலத்தின் ஓட்டுகளை அள்ள வழி செய்தன. இந்த மாய வலையில்
விழுந்த ஜனங்கள், இதிலிருந்து மீளும் வழி தெரியாமல் இன்னும்
அரசியல்வாதிகளின் தேசத் துரோகத்திற்குத் துணைபோகின்றனர்.
இன்று
என்னைப் போன்றவர்களிடம் சட்டத்தை நீட்டுவோர், முதலில் தண்டித்திருக்க
வேண்டியது ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் தான். எது எப்படியோ...
இந்த குற்றங்கள் களையப்படும் வரை, நேர்மையான நடுநிலையாளர்கள்,
நீதிமன்றத்தின் கதவைத் தட்டிக் கொண்டே இருப்பர்.
பராசக்தியாய் வீரம் காட்ட வேண்டிய மக்கள் இன்று பரமநோஞ்சானாய் நிற்பது தான் தற்போது தென்படும் காட்சி!
ஹிந்துக்களுக்கு துரோகிகள் ஹிந்துக்களே!
சுப்ர.அனந்தராமன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க.,வே ஹிந்து
விரோத நச்சுப் பாம்பு' என்கிறார் பா.ஜ., மூத்த தலைவர் ெஹச்.ராஜா.
ஹிந்துக்களுக்கு,
தி.மு.க., மட்டுமல்ல; பண பலம் கொண்ட, 'செக்யூலர்' வாதம் பேசும்
ஹிந்துக்களே பரம விரோதிகள். சில போலி சாமியார்களும், இந்த பட்டியலில்
உண்டு.
பா.ஜ., முன்பு, 'ஜன சங்கம்' அமைப்பாக இருந்த காலத்திலேயே
கூட, தீவிர ஹிந்து மத அபிமானியாக, சுயேச்சை எம்.பி., ஒருவர் இருந்தார்.
அவர் பெயர், பாபு ராவ் படேல். 'மதர் இந்தியா' என்ற தீவிர ஹிந்து ஆதரவு மாத
இதழை, ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் நடத்தினார்.
அவர் நடத்திய மாத
இதழில், பால்ராஜ் மதோக், கோவிந்தாச்சாரியா, ஜகந்நாத ராவ் ஜோஷி போன்ற
உண்மையான ஹிந்து மத தியாகிகள், அந்தக் காலத்திலேயே சொந்தக் கட்சி தலைமையால்
அலட்சியம் செய்யப்பட்ட அவல வரலாறை அறியலாம்.
ஹிந்து மதம், விரோதிகளால் மட்டுமல்ல; துரோகிகளா--லேயே அதிகம் பாதிக்கப்பட்ட சோகத்தை அறியலாம்.

