sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

தரம் தாழ்ந்து தான் இருக்கிறது!

/

தரம் தாழ்ந்து தான் இருக்கிறது!

தரம் தாழ்ந்து தான் இருக்கிறது!

தரம் தாழ்ந்து தான் இருக்கிறது!

15


PUBLISHED ON : செப் 09, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 09, 2024 12:00 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்.வைகைவளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள், உலகின் தலைசிறந்த டாக்டர்களாக உள்ளனர். இதைப் பிடிக்காத சிலர், வயிற்றெரிச்சல் காரணமாக தமிழகத்தின் பாடத் திட்டத்தை குறை கூறுகின்றனர்' என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

'மயில்சாமி அண்ணாதுரை, வீர முத்துவேல் ஆகியோர் அரசு பள்ளிகளில் படித்து இஸ்ரோ விஞ்ஞானிகளாகி உள்ளனர்' என்று சொல்லி அரசு பள்ளிகளைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார் உதயநிதி.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது அரசு பள்ளிகள் அனைத்தும், தரத்தில் உயர்ந்திருந்தன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இப்போது, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து போய்விட்டது தான் நிதர்சனமான உண்மை.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற தேர்வுகளில் அரசு பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறுவோர் மிகக் குறைவு தானே?

அரசியல்வாதிகளின் பிள்ளைகள், அதிகாரிகளின் பிள்ளைகள் எல்லாம், தனியார் பள்ளிகளில்தானே படிக்கின்றனர்!

கூலி வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் தான், வேறு வழியின்றி அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.

தனியார் பள்ளிகளில் இருக்கும் சுகாதார வசதிகள், அரசு பள்ளிகளில் இருப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தக் காலத்தில் அரசு பள்ளிகளில் படித்து வெளியே வருபவர்கள், டாக்டர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக இருப்பது அபூர்வம்.

மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றவர்கள், அரசு பள்ளிகளில் - கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றனரா என்பதை, உதயநிதி தான் மக்களுக்கு விளக்க வேண்டும்.

தமிழக கவர்னர் சொல்வது போல, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மூன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தைப் படிக்க முடியாமல் தடுமாறுகின்றனர் என்பதுதான் உண்மை.

சாதாரண கூட்டல் கழித்தல் போன்ற கணக்குகளைக் கூட, கால்குலேட்டர் உதவியுடன் தான் இந்தக் காலத்து மாணவர்கள் செய்கின்றனர்.

அந்த அளவுக்கு, தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் தாழ்ந்து போயிருக்கிறது.

'தினமலர்' ஓர் இயக்கம்!


ஆர்.ஹரிகோபி, புதுடில்லியிலிருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: 'நான் ஏன் தினமலர் படிக்கிறேன்' என்ற 50 ஆண்டு கால வாசகர், மதுரை வி.குமாரின் கட்டுரை, 'தினமலர்' பிறந்த நாளான செப்டம்பர் 6 அன்று படித்து உவந்தேன். அது எங்களைப் போன்ற, ஒவ்வொரு தினமலர் வாசகர்களின் மன பிரதிபலிப்பு.

மக்களின் நாடித் துடிப்பை அறிந்து, செய்திகளை உடனுக்குடன் தருவதும், இணைப்பிதழ்கள் மூலம் அனைத்து தரப்பு வாசகர்களையும் தன் வசப்படுத்தி, அரவணைத்து, ஆதரித்து, ஊக்குவித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதாலும், தினமலர் நாளிதழ் வாசகர்களின் மனதில் ஒரு நாளிதழாக இல்லாமல், ஒரு இயக்கமாகவே பதிந்துள்ளது.

குறிப்பாக ஞாயிறு இணைப்பு வாரமலருக்கு வாசகர்கள் ஏராளம். தினமலர், முகவர்கள், விளம்பரதாரர்கள், படைப்பாளர்கள், வாசகர்கள் என எல்லாரையும் குடும்ப உறுப்பினராக பாவிப்பதால் தான், இந்த இமாலய சாதனை சாத்தியமாகி உள்ளது.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல், இன்றைக்கு இந்த நேரம் வரை, கிட்டத்தட்ட 58 ஆண்டுகளாக, தினமலர் நாளிதழ் வாசிப்பதை, விளம்பரங்களைக் கூட விட்டு வைப்பதில்லை, ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

தினமலர் மேலும் பல்லாண்டுகள் பத்திரிகை உலகில் செழித்தோங்க வாழ்த்துகள்!

உங்கள் பெயரை போடுவது அறிவியல் அறிவா?


பி.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தமிழக பள்ளிகளில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்திருப்பதும், சென்னையில் இரண்டு தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

'பரம்பொருள் அறக்கட்டளை' என்ற அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு, தன் உரையின் நடுவில் வந்த இந்த இடையூறு, யாரிடமிருந்து என்பதை உணராமல், குதர்க்கமாக பேசியது குற்றம் என்றாலும், 'இனிமேல் பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவுகள் இருக்கக் கூடாது' என்று சொல்வதற்கு, அந்த இறைவன் என்ன தவறு செய்தார்?

ஒரு நாள் சமையல் சரியாக செய்யப்படவில்லை என்பதால், நாம் சாப்பிடாமலே இருந்து விடுவோமா?

பெரும்பாலான கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில், காலையில் யாரோ ஒரு ஆசிரியரோ அல்லது தலைமை ஆசிரியரோ ஒரு ஆன்மிக உரையை நடத்தி விட்டு, பைபிளிலிருந்து வாசகங்கள் சொல்வது, இன்றும் நடைபெற்று வருகிறது.

நம் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் அவற்றை கண்டுகொள்ளாமல், ஹிந்து பள்ளிகளில் நடத்தப்படும், இது போன்ற ஆன்மிக உரைகளின் மீது வெறுப்பு காட்டுவது ஏன்?

தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய மகனின் அந்தரங்க நண்பனான பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் என்பதால், 'அறிவியல் வழியே முன்னேற்றத்திற்கான வழி, அதனால், இனிமேல் இறைவனுக்கு மதிப்பு கொடுக்காதீர்கள்' என்பது போல வெளிநாட்டிலிருந்து ஒரு அறிக்கை கொடுக்கிறார்.

எவ்வளவோ குற்றவாளிகளை தப்ப விட்டு வேடிக்கை பார்த்த இந்த அரசு, மகாவிஷ்ணுவை மட்டும், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்ததும் கைது செய்து, மாபெரும் குற்றவாளி என்பது போல விசாரணை செய்துள்ளது.

மாணவர்களை, 'படிப்பில் கவனம் அவசியமில்லை; போராட்டம் தான் நம் வழி' என்று கூறும் இந்திய மாணவர் சங்கத்தினரும், நம் அரசியல்வாதிகளால் துாண்டப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

இது மட்டுமே இல்லாமல், 'எங்கள் குலதெய்வத்திற்கு நடக்கும் குடமுழுக்கு நீராட்டு விழாவிற்கான அழைப்பிதழில் கூட, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நல்வழி காட்டுதலின் படி' என்று முதலில் போட்டு, பின், 30 கழக உடன்பிறப்புகளின் பெயரை போட்டுக் கொள்ளும் போது, இந்த அறிவியல் அறிவு எங்கே போனது?

தன் மனைவி துர்கா ஸ்டாலின் எத்தனை ஹிந்து மதக் கோவில்களுக்கு சென்று வழிபட்டாலும், தன் கட்சிக் கொள்கையை மறந்து விடும் ஸ்டாலின் அவர்களின் அரசு, 'கடவுளே இல்லை, ஹிந்து மதத்தை எதிர்ப்பது தான் எங்கள் கொள்கை' என்று செயல்பட்டாலும், அதை எந்த மதமும் ஏற்றுக் கொள்ளாது என்பதே உண்மை!






      Dinamalar
      Follow us